world

img

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ஆக.4இல் இந்தியா வருகை

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ஆக.4இல் இந்தியா வருகை

 புதுதில்லி,ஆக.1- பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ஃபெர்டினாண்ட் ஆர்.மார்கோஸ் ஜூனியர், ஆகஸ்ட் 4 முதல் 8 வரை அரசு முறைப் பயணமாக இந்தியா வருவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. மார்கோஸ் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு முதல் அரசுமுறை பயணமாக இந்தியா வருவது குறிப்பிடத்தக்கது.  இந்தப் பயணத்தின்போது அவர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவையும் சந்திக்க உள்ளார் என்றும் மோடியுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என்றும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளி யிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், அவர் இந்தியா வருவதாக தெரிவிக்கப்பட்டுள் ளது. மேலும் இந்த பயணத்தில் அவரது மனைவி லூயிஸ் ஆர்நெட்டா மார்கோஸ்,  அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் வணிகப் பிரதிநிதிகள் அடங்கிய உயர்மட்டக் குழுவும் இந்தியா வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த சந்திப்பில் இருநாடுகளுக்கும் இடையிலான வணிகம் மற்றும் முதலீடுகள் குறித்து, பலதரப்பு ஒத்து ழைப்பு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என கூறப்படுகிறது. ஆகஸ்ட் 8 அன்று அவர் பிலிப்பை ன்ஸ் திரும்புவதற்கு முன், கர்நாடக மாநிலம் பெங்களூருக் கும் செல்ல உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.