world

உக்ரைன்-ரஷ்யா போர் கள நிலவரம்

  1. வளைகுடா அரபு நாடுகள் ரஷ்யா மீது தடைகள் விதிக்காது என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேற்கத்திய நாடுகள்  திணித்த பொருளாதார போரில் ரஷ்யா வென்று வருவதாக கார்டியன் பத்தி ரிக்கை ஆதங்கத்துடன் கூறுகிறது.
  2. அமெரிக்கா/ஐரோப்பாவுக்கு ஏற்பட்ட பின்னடைவை உக்ரைன் போருக்கு பின் முதல் முறையாக ஒரு மேற்கத்திய பத்திரிகை ஏற்றுக்கொண்டுள்ளது. தாங்கள் நேட்டோவில் இணைவது இவ்வளவு சிக்கல்களை துருக்கி உருவாக்கும் என எதிர்பார்க்க வில்லை என பின்லாந்தின் வெளியுறவு அமைச்சர் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
  3. சர்வதேச பொருளாதாரப் பின்னல்களில் ரஷ்யா வின் பங்கு மேற்கத்திய நாடுகள் எதிர்பார்த்ததை விட அதிகமாக உள்ளது எனவும் மேற்கத்திய நாடு கள் ரஷ்யாவை குறைத்து மதிப்பிட்டன எனவும் லுகியனோவ் எனும் பிரபல பத்திரிகையாளர் கூறியுள்ளார்.
  4. குழந்தைகளின் உணவுப் பொருட்கள் நெருக்கடி யை குறைத்து மதிப்பிட்டதை பைடன் ஏற்றுக் கொண்டுள்ளார். ரஷ்யாவை சிதைக்க வேண்டும் என ஒவ்வொரு நிமிடமும் சிந்தித்தவர் தனது தேசத் தின் குழந்தைகள் பற்றி சிந்திக்க மறந்துவிட்டார்.
  5. சில நவீன ஆயுதங்களை உக்ரைனுக்கு தருவதாக ஜெர்மனி ஜனாதிபதி ஷோல்ஸ் அறிவித்தார். ஆனால் அந்த ஆயுதங்கள் தங்களிடம் இல்லை என ஜெர்மனி ராணுவம் தெரிவித்துள்ளது.  ரஷ்யாவின் எண்ணெய் உற்பத்தி மிகவும் குறைந்தால் அதனை ஈடு செய்ய சவூதி அரேபியா வை நிர்ப்பந்தம் செய்யும் பணிகள் நடக்கின்றன என ஃபைனான்சியல் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
  6. ஸ்லோவேக்கியா அதிநவீன பீரங்கிகளை உக்ரைனுக்கு தர முன்வந்துள்ளது. ரஷ்யா, உக்ரைன், துருக்கி ஆகிய மூன்று நாடு களும் ஐ.நா.வின் ஒருங்கிணைப்புடன் உணவு தானியங்களை உக்ரைன் துறைமுகங்களிலிருந்து பாதுகாப்பாக கொண்டு செல்ல முன்வந்துள்ளன.
  7. மிக அதிநவீன எம்.கியூ.1சி எனப்படும் துரோன் விமானத்தை உக்ரைனுக்கு விற்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.