- மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு தரும் ஆயுதங்களால் போரின் திசைவழி மாறப்போவது இல்லை என புடின் கூறியுள்ளார். மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு தரும் ஆயுதங் களின் தாக்குதல் தூரம் அதிகரிக்கும் அதே அள வுக்கு உக்ரைனிற்குள் ரஷ்ய படைகள் செல்லும் தூரமும் அதிகரிக்கும் என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரவ் அதிரடியாக பேசியுள்ளார்.
- முன்னாள் சோசலிச நாடான கிழக்கு ஜெர்மனி பகுதியில் உள்ள மக்கள் 58% பேர் ரஷ்யாவுடன் ஜெர்மனி விரோதம் காட்டுவதை ஆதரிக்கவில்லை.
- இவர்கள் ஜெர்மனி சமூகத்துடன் முழுமையாக கரையவில்லையா என எதிர்த்தரப்பினர் கேள்வி எழுப்புகின்றனர். ரஷ்யாவுக்கு சில சலுகைகளை தருமாறு உக்ரைன் நிர்பந்திக்கப்படுகிறது என ஜெலன்ஸ்கி கூறியுள் ளார்.
- மேற்கத்திய நாடுகளை நம்பினால் இதுதான் கதி என இப்பொழுதாவது உணர்வாரா? உக்ரைன் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பே இல்லை எனவும் ரஷ்ய-
- உக்ரைன் பேச்சுவார்த்தை களை அமெரிக்கா ஊக்குவிக்க வேண்டும் எனவும் முன்னாள் நேட்டோ முக்கிய அதிகாரியாக இருந்த ஹியூக் சேன்டிஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
- இன்னும் கூடுதலான ரஷ்ய எண்ணெய்யை வாங்கு வதற்கு இந்தியா பேச்சு வார்த்தை நடத்திவருவதாக புளூம்பெர்க் ஊடகம் கூறியுள்ளது. உக்ரைன் போர் காரணமாக பல ஆண்டுகளுக்கு பின்னர் வெனிசுலா எண்ணெய் ஐரோப்பா செல்ல அமெரிக்கா அனுமதித்து உள்ளது.
- உக்ரைன் பிரச்சனை உட்பட உள்நாட்டு/வெளிநாட்டு விவகாரங்களை பைடன் சரியாக கையாளவில்லை என 70% அமெரிக்க மக்கள் கருதுவதாக கணிப்புகள் வெளியாகியுள்ளன.
- இதே மனோ நிலை மக்களுக்கு தொடர்ந்தால் நவம்பர் தேர்தல்களில் ஜனநாயக கட்சி வேட்பாளர்கள் நிலை பரிதாபம்! ரஷ்ய எண்ணெய்க்கு தடை; கடும் தட்டுப்பாடு விளைவாக போலந்து அரசாங்கம் காடுகளில் உள்ள மரங்களை எரிசக்திக்காக பயன்படுத்தி கொள்ள லாம் என அனுமதி!
- தாங்கள் கற்காலத்துக்கு சென்றா லும் ரஷ்யாவை சிதைக்காமல் விடமாட்டோம் என போலந்து போல சில நாடுகள் நினைக்கின்றன போலும். ஜெர்மனி பழைய டாங்கிகளை கூட தங்களுக்கு தர மறுக்கிறது என ஜெர்மனிக்கான உக்ரைன் தூதர் குற்றம்சாட்டியுள்ளார்.