world

உக்ரைன்-ரஷ்யா போர் கள நிலவரம்

  1. சர்வதேச உணவு  நெருக்கடிக்கு ரஷ்ய தடைகள் காரணம் இல்லை எனவும் ரஷ்யாவின் உக்ரைன் படையெடுப்புதான் காரணம் எனவும் ஜி 7 நாடு கள் கருத்து தெரிவித்துள்ளன.
  2. ரஷ்யா மீது சுமத்தப் பட்ட சுமார் 4500 தடைகள்தான் காரணம் என்பது உலக நடப்புகளை அறிந்த எவர் ஒருவரும் ஏற்றுக்  கொள்வார்கள்.  
  3. நேட்டோவும் ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து ரஷ்யா மீது போர் தொடுத்துள்ளன என ரஷ்ய  வெளியுறவு அமைச்சர் லாவ்ரவ் குற்றம் சாட்டி யுள்ளார்.
  4.  உக்ரைனின் பாதுகாப்பு முதன்மை அதிகாரி இவான் பகனோவை பதவி நீக்கம் செய்ய ஜெலன்ஸ்கி முடிவு செய்துள்ளதாக பொலிடிக்கோ எனும் பத்தி ரிகை தெரிவித்துள்ளது.
  5. உக்ரைன் படையில் பலரும் ரஷ்யாவிடம் சரண் அடைவதையும் ராணுவ பணியிலிருந்து விலகி ஓடுவதையும் தடுக்க இவான் தவறிவிட்டார் என்பதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
  6. உக்ரைன் படையினர் போரில் அதிக எண்ணிக்கை யில் உயிரிழப்பதும் சரண் அடைவதும் அதி கரித்த பின்னணியில் பெண்களையும் சிறைக் கைதி களையும் ராணுவ கட்டாய பணியில் ஈடுபடுத்த உக்ரைன் அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன.
  7. நேட்டோவுக்காக இந்த உயிரிழப்புகள் தேவையா? கிழக்கு உக்ரைனில் லுகான்ஸ்க் பகுதியில் ரஷ்ய ராணுவம் சுமார் 2000 உக்ரைன் வீரர்களை சுற்றி வளைத்துள்ளது.
  8. இவர்களுக்கு உணவு , ஆயுதம் எதுவும் கிடைக்காத வகையில் இந்த முற்றுகை உள்ளது. சரணடைவதா, வீரமரணமா என்பது முடிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இவர்கள் உள்ளனர்.
  9. நேட்டோ இதைப்பற்றி கவலைப்படு வதாக தெரியவில்லை.  பிரிட்டனுக்குள் நுழையும் சட்ட விரோத உக்ரைன் அகதிகள் ருவாண்டா எனப்படும் ஆப்பிரிக்க நாட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என போரீஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.
  10. உக்ரைன் அகதிகளின் சுமையை ஐரோப்பிய நாடுகள் விரும்பவில்லை என்பதற்கு மேலும் ஒரு உதாரணம்.
  11. உக்ரைனுடன் இனி நிபந்தனையுடன் கூடிய பேச்சு வார்த்தைகள்தான் சாத்தியம் என ரஷ்யா அறி வித்துள்ளது.
  12. போர் முனைகளில் கிடைத்து வரும் வெற்றியின் காரணமாக ரஷ்யாவின் கை ஓங்கியுள்ளது போலும்!
;