world

உக்ரைன்-ரஷ்யா போர் கள நிலவரம்

  1. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் விலை வாசிகள் உயர்ந்துள்ளன. பைடன் இதற்கு புடின் மீது பழி போடுகிறார்.  
  2. உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் தரும் ஆயுதங்கள் போரை நீட்டிக்கும். ஆனால் முடிவை மாற்றாது என ரஷ்யா அறிவித்துள்ளது.
  3. போரில் உக்ரைன் பலத்த இழப்பு களை சந்தித்துள்ளது என ஜெலன்ஸ்கியின் ஆலோசகர் அலெக்சி அரெஸ்டோவிச் கூறி யுள்ளார்.
  4. ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் இணைவதற்கு முன்பு உக்ரைன் பல சீர்திருத்தங்களை செய்ய வேண்டும் என ஐரோப்பிய ஆணையம் தெரிவித்துள்ளது.
  5. பல ஐரோப்பிய பிரதிநிதிகள் போது மான ஆதாரங்கள் இல்லாமலேயே ரஷ்யா மீது போர் அவதூறுகளை ஐ.நா.வில் கூட கூறினார்கள் என  ரேச்சல் மர்ஸ்டென் எனும் பத்திரிக்கையாளர் கூறியுள்ளார்.
  6. ரஷ்ய தடைகள் காரணமாக இந்த குளிர்காலம் ஜெர்மனி மக்க ளுக்கு பெரும் இன்னல்களாக இருக்கும் என உதவி ஜனாதிபதி ராபர்ட் ஹெபெக் அபாய சங்கு ஊதியுள்ளார்.
  7. ரஷ்யாவிலிருந்து வெளியேறிய காரணத்தால் பல மேற்கத்திய நிறு வனங்கள் 60 பில்லியன் டாலர்கள் இழந்துள்ளன என வால்ஸ்ட்ரீட் ஜோர்னல் பத்திரிக்கை மதிப்பிட்டுள் ளது.
  8. ரஷ்ய தடைகள் காரணமாக நெதர் லாந்தில் எரிபொருள் விலை வர லாறு காணாத அளவுக்கு உய்ரவு. பிரான்சு மேலும் கனரக ஆயுதங்களை உக்ரைனுக்கு தர முன்வந்துள்ளது.
  9. உக்ரைன்- ரஷ்யாவிலிருந்து உணவு  பொருட்களும் உரமும் இல்லை எனில் 2023ல் உலகம் பெரிய நெருக்கடியை சந்திக்கும் என ஐ.நா. எச்சரித்துள்ளது.