- ரஷ்ய எண்ணெய்க்கு தடைவிதிப்பதில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இடையே ஒருமித்த கருத்து உருவாகவில்லை.
- ரஷ்ய-அமெரிக்க உயர் ராணுவ அதிகாரிகளுக்கு இடையே தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடந் துள்ளது.
- இதனை வேண்டிக்கேட்டது அமெரிக்க தரப்பு. போருக்கு சுமுகமான தீர்வு கிடைக்கும் என நம்புவதாக நேட்டோ அதிகாரிகள் கூறியுள்ளனர். அமெரிக்க செனட் சபை 40 பில்லியன் அதாவது 3 லட்சம் கோடி ரூபாய் ராணுவ உதவி மற்றும் ஏனைய உதவிகளை உக்ரைனுக்கு தர தீர்மானம் இயற்றி யுள்ளது. உக்ரைனின் ஆண்டு ராணுவ பட்ஜெட்டை விட இது 10 மடங்கு அதிகம். ஆனால் அமெரிக்கா வில் குழந்தைகளின் பால்பவுடர் உணவு இல்லா மல் மக்கள் இன்னலில் உள்ளனர்.
- மேற்கத்திய நாடுகள் உக்ரைனின் கோதுமை முழுவதையும் பறிக்க திட்டமிட்டு இருப்பதால் சர்வதேச அளவில் உணவு பற்றாக்குறை ஏற்படும் என புடினின் உதவியாளர் மக்சிம் ஒரேக்சின் எச்சரித்துள்ளார்.
- உக்ரைன் ராணுவ முரண்பாடுகள் விரிந்த போராக பரவும் ஆபத்து உள்ளது என பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரோன் அபாய சங்கு ஊதியுள்ளார்.
- ரஷ்யாதான் எங்களுக்கு 50% எரிசக்தியை தரு கிறது. நாங்கள் எப்படி ரஷ்யாவுக்கு எதிராக செயல்பட முடியும் என துருக்கி ஜனாதிபதி எர்டோகன் கேள்வி எழுப்பியுள்ளார். நாங்கள் நேட்டோவில் இணைந்தாலும் நேட்டோ வின் ஏவுகணைகளை அல்லது ராணுவ தளங் களை அமைக்க மாட்டோம் என பின்லாந்து கூறி யுள்ளது. ரஷ்யாவின் எச்சரிக்கைக்கு பிறகு இந்த விளக்கம்! அமெரிக்கா போரில் உள்ளது என உக்ரைன் பிரச்சனையில் அரசியல்வாதிகள் சொல்வதை நாடாளுமன்ற உறுப்பினர் சிப் ராய் கடுமையாக விமர்சித்துள்ளார்.
- ரஷ்யாவுடன் மறைமுக போர் தேவைதானா எனவும் 40 பில்லியன் டாலர்கள் உக்ரைனுக்கு தருவதையும் அவர் எதிர்த்துள்ளார். ரஷ்யா மீது பல தடைகளை விதித்த போதிலும் ரஷ்யாவின் கோதுமை தேவை என பல மேற்கத்திய நாடுகள் கோருகின்றன.
- அமெரிக்கா தனது அதி நவீன ஆயுதங்களை தருவது இல்லை என உக்ரைன் ஏமாற்றத்தை தெரிவித்துள்ளது.