- ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரசும், புடினும் சந்தித்துப் பேசியுள்ளனர். ரஷ்யாவின் படையெடுப்புக்கு காரணங்களை புடின் விளக்கியுள்ளார். ஏற்கெனவே யுகோஸ்லேவியா/செர்பியாவிலிருந்து கொசோவா பிரிந்து எப்படி சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டதோ அதன் வழியில்தான் டான்பாஸ் பகுதியில் உள்ள இரு பகுதிகள் தனி நாடுகளாக அந்த மக்கள் அறிவித்துள்ளனர் என புடின் கூறினார். ஆனால் கொசோவாவை இன்னும் ஐ.நா.அங்கீகரிக்கவில்லை என குட்டரஸ் கூறினார். பல மேற்கத்திய நாடுகள் உட்பட 95 தேசங்கள் அங்கீகரித்துள்ளனரே என்பதை புடின் சுட்டிக்காட்டினார். டான்பாசுக்கும் கொசவாவுக்கும் வேறுபட்ட நீதி எப்படி இருக்க இயலும் என்பது புடினின் கேள்வி.
- உக்ரைனுக்கு அதிக ஆயுதங்களை தர வேண்டும் என அமெரிக்காவில் கோரிக்கை வைக்கும் பலரும் லாக் ஹீட் மார்ட்டின் போன்ற மிகப்பெரிய ஆயுத தொழிற்சாலைகளின் இயக்குநர்களாகவும் உள்ளனர். அவர்களின் லாபத்துக்கு போர்கள் இன்றியமையாதவை!
- ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவின் தடைகள் ரஷ்யாவின் பொருளாதாரத்தை சிதைத்து அழித்துவிடும் என பிரான்சு நிதி அமைச்சர் புருனோ மேரி மார்ச் மாதம் 1ஆம் தேதி கூறினார். ஆனால் இன்று ரஷ்யப் பொருளாதாரம் தாக்குப் பிடித்துள்ளது மட்டுமல்ல; டாலர்/யூரோவுக்கு எதிராக ரூபிள், போருக்கு முந்தைய நாட்களைவிட உயர்ந்து வலுவாக உள்ளது.
- ரஷ்ய - உக்ரைன் எல்லையில் உள்ள பெல்கொரோட் பகுதியில் உள்ள மிகப்பெரிய ரஷ்ய ஆயுதக் கிடங்கை உக்ரைன் ஏவுகணைகள் தாக்கியுள்ளன. சில நாட்களாக ரஷ்யாவுக்குள் உக்ரைனின் தாக்குதல் அதிகரித்துள்ளது.
- உக்ரைன் நேட்டோவில் சேராமல் நடுநிலை வகிப்பது என முடிவு எடுத்தால் அமெரிக்கா அதனை ஆட்சேபிக்காது என வெளியுறவு அமைச்சர் பிளிங்கன் தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கு உதவ வானத்துக்கும் பூமிக்கும் இடையே பயணிக்கவும் தயார் என அமெரிக்க ராணுவ அமைச்சர் ஆஸ்டின் கூறியுள்ளார். முரண்பட்ட தகவல்களை அமெரிக்கா வெளி உலகுக்கு தருகிறதா?
- நேட்டோவில் இணையும் பின்லாந்து மற்றும் சுவீடனின் முடிவு சிறுபிள்ளைத்தனமானது; தங்கள் தேசம் அதனை எதிர்க்கும் என குரோஷிய ஜனாதிபதி சோரான் மிலனோவிக் எச்சரித்துள்ளார்.
- ரஷ்ய நாணயம் ரூபிளில் பணம் தர மறுப்பதால் மே 1ஆம் தேதி முதல் போலந்துக்கு எரிசக்தி வாயு நிறுத்தப்படும் என ரஷ்யா அறிவித்துள்ளது.
- உக்ரைனில் உள்ள சில முக்கிய ரயில் பாதைகளையும் மின்சார ரயில்களை இயக்கும் மின் துணை நிலையங்களையும் ரஷ்யா தாக்கி அழித்துள்ளது. இந்த தடங்கள் வழியாகத்தான் மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்கள் உக்ரைனுக்குள் கொண்டு வரப்படுகின்றன.
- உக்ரைனுக்கு அமெரிக்கா ஏவுகணைகளை வாரி வழங்கி வருகிறது. ஆனால் இந்த ஏவுகணைகளை மீண்டும் தயாரித்துத் தர 7 ஆண்டுகள் ஆகும் என ரேத்தியன் எனும் ராணுவஆயுத தயாரிப்பு நிறுவனம் பெண்டகனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.