மாஸ்கோ/பெய்ஜிங்,ஜன.22- டிரம்ப் பதவியேற்ற பிறகு ரஷ்ய ஜனாதிபதி புடினும், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும் செவ்வாய்க்கிழமையன்று காணொலி வாயிலாக உரையாடியுள்ளனர். இரு நாடுகளுக்கும் இடை யிலான உறவுகளை மேலும் வலுப்படுத்து வது தொடர்பாக அவர் கள் பேசியுள்ளனர். இந்த உரையாட லில் தற்போதைய சர்வ தேசச் சூழல் சார்ந்து பேசவில்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்குப்பிறகு ரஷ்யா மற்றும் சீனாவிற்கு இடையிலான உறவுகள் நன்றாக அதிகரித்தது. ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயுவின் முக்கிய வாடிக்கையாளராக சீனா மாறியது. சீனாவின் தொழில் நுட்ப வளர்ச்சியின் உதவியை ரஷ்யா பெற்றுக் கொண்டது. இவ்வாறு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளின் பொருளாதாரத் தடைகளுக்கு இடையே பொருளாதார உறவுகளை இரண்டு நாடுகளும் வளர்த்துள்ளன. உலக நாடுகளுக்கிடையே உறுதித்தன்மை, பாது காப்பை வலுப்படுத்துதல் உள்ளிட்ட உலகளாவிய நிகழ்ச்சி நிரலில் சில முக்கிய விஷயங்களில் ரஷ்யா மற்றும் சீனா வகிக்கும் முக்கியப் பங்கைக் கருத்தில் கொண்டு, சமமான அடிப்படையிலும் பரஸ்பர மரியாதை யின் அடிப்படையிலும் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு இருக்க வேண்டும் என்று ரஷ்ய ஜனாதிபதி புடின் வலியுறுத்தியுள்ளார். டிரம்ப் பதவி ஏற்புக்கு இரண்டு நாட்களுக்கு முன்ன தாக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் புடின் உரை யாடியுள்ளார். அதேபோல ரஷ்யாவும் ஈரானுடனான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் 20 ஆண்டு கால ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது குறிப்பி டத்தக்கது.