world

img

பாரிஸ்: பாசிசத்திற்கு எதிராக இடதுசாரிகள் போராட்டம்!

தேசிய பேரணி கட்சியின் பாசிச கொள்கைகளுக்கு எதிராக பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இடதுசாரிகள் மாபெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். 
பிரான்ஸ் நாட்டில் முன்கூடியே நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலின் முதல் சுற்று நேற்று (ஜூன் 30) தீவிர வலதுசாரி கட்சியான தேசிய பேரணி (RN) கட்சி 34% வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றது. இடதுசாரி கட்சியான நியூ பாப்புலர் ஃப்ரண்ட் 29% வாக்குகளும், அதிபர் மேக்ரோன் தலைமையிலான கூட்டணி 20.5% வாக்குகள் பெற்றது. இதன் 2-ஆம் சுற்று வரும் ஜூலை 7-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த நிலையில், தேசிய பேரணி கட்சியின் பாசிச கொள்கைகளுக்கு எதிராக பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இடதுசாரிகள் மாபெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்தில், பாலஸ்தீனம், அல்ஜீரியா மற்றும் LGBTQ+ அமைப்பின் கொடிகள் அதிகம் காணப்பட்டன.
 

;