காசா மீதான இஸ்ரேல் ராணுவத்தின் நடவடிக்கைகள் அதிகரிக்கப்படுவதால், அங்கு வசிக்கும் பாலஸ்தீனர்கள் உடனடியாக வெளியேற வேண்டுமென இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.
பாலஸ்தீனத்தை ஆக்கிரமிக்கும் வகையில் தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
காசா நகரத்தின் மீது, நேற்று நள்ளிரவு முதல் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் சுமார் 20-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பை அழிப்பதற்காக, காசா மீதான ராணுவ நடவடிக்கைகள் இன்று அதிகரிக்கப்படுவதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
காசா மீதான நடவடிக்கைகள் அதிகரிக்கப்படும் எனவும், அங்குள்ள மக்கள் வெளியேற வேண்டுமெனவும், கடந்த ஒரு மாதமாகவே இஸ்ரேல் அரசு எச்சரிக்கை விடுத்து வந்தது.
காசா மக்களை வலுக்கட்டாயமாக இஸ்ரேல் வெளியேற்றி வருகிறது.
காசாவின் தெற்கு பகுதிகளில் தஞ்சமடைந்துள்ள மக்கள் போக்குவரத்து செலவு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் காசாவை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.