world

img

இஸ்ரேல் தாக்குதல்- காசாவில் உயிரிழப்பு அதிகரிப்பு

காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44,758 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து காசா சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியிருப்பதாவது:

காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 50 பேர் உயிரிழந்தனர். 84 பேர் காயமடைந்தனர்.

இத்துடன், அந்தப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் கடந்த ஆண்டு அக்.7 முதல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44,758 ஆக அதிகரித்துள்ளது.

இதுதவிர, இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை 1,06,134 பாலஸ்தீனர்கள் காயமடைந்தனர் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.