world

img

ஜனாதிபதி போட்டியில் பைடனுக்கு கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு

நியூயார்க்,  ஜூலை 4- அமெரிக்க ஜனாதி பதி தேர்தலில் ஜனநாய கக் கட்சி சார்பில் ஜனா திபதி வேட்பாளராக களத்தில் உள்ள அமெ ரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி  ஜோ பைட னுக்கு அவரது கட்சிக் குள்ளேயே கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. 

ஜனாதிபதி பைடனுக்கும் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப்க்கும் கடந்த வாரம் நடைபெற்ற நேரடி விவாத  நிகழ்ச்சியில் டிரம்ப் எழுப்பிய குற்றச் சாட்டுக்கும், கேள்விகளுக்கும் முறையாக பதில் சொல்லமுடியாமல் திணறிய பைடன், நீண்ட நேரம் யோசித்து யோசித்து பதிலளித்தார். அந்த பதிலும் நாகரீகமாகவோ வலுவாக வோ இல்லை என்று கடுமையான விமர்சனங்கள் எழுந்தது.

81 வயதான பைடனும் 79 வயதான டிரம்ப்பும் அதிக வயதுடைய ஜனாதிபதி வேட்பாளர்களாக உள்ளனர். இந்நிலையில் பைடன் வயது மூப்பின் காரணமாக தனது நிதான நிலையை இழந்து விட்டார் என அவரது கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.

ஜனநாயகக் கட்சியை சேர்ந்த லாயிட்டோ டொகெட் என்ற மூத்த எம்.பி பகிரங்கமாகவே பைடனை விமர்சித் தார். மேலும் பைடன் ஜனாதிபதி போட்டியில் இருந்து விலக வேண்டுமென கூறினார்.ஜனநாயகக்  கட்சியை சேர்ந்த பலரும் இந்த கருத்தை ஆமோதித்துள்ளனர்.

இந்நிலையில் அவர் விலகினால் கமலா ஹாரிஸ் ஜனாதிபதியாக போட்டியிடுவார் என கூறப்பட்டது. எனினும் ஜனாதிபதி வேட்பாளர் தானாக விலகினால் மட்டுமே இது நடக்கும்.இந்நிலையில் என்னை யாரும் போட்டியில் இருந்து விலகக்  கூறவில்லை. நானும் விலகப்போவதில்லை என பைடன் தெரிவித்துள்ளார்.

;