world

img

உலகளாவிய ஒத்துழைப்பு

ஜெனீவா, ஜூன் 16- தற்போது நம்முன் உள்ள உலகளாவிய சவாலைச் சந்திக்க உல களாவிய முயற்சிகளும், உலக ளாவிய ஒத்துழைப்பும் தேவை என்று உலக வர்த்தகக் கழகத்திற் கான சீனத் தூதுவர் லி செங்காங் கூறியுள்ளார். ஜெனீவாவில் உலக வர்த்தகக் கழகத்தின் 12வது அமைச்சர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது.  அதில் பேசுகையில்தான் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.  மேலும் பேசிய அவர்,  “சீனாவின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி என்பது நீண்ட காலத்திற்கு அவற்றைத் தக்க வைத்துக் கொள்வதை இலக்காகக் கொண்டதாகும்.  பிளாஸ்டிக் மாசுக்கு எதிராகப் போராடுவதில் எப்போதுமே சீனா முன்னிற்கிறது.  அதன் தாக்கத்தைக் கட்டுப் படுத்த அண்மைக்காலங்களில் ஏராளமான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். அனைத்து உறுப்பு நாடுகளையும் ஒருங்கிணைத்து மாசுக்கட்டுப்பாடு நடவடிக்கை களை மேற்கொள்வதற்கான பொறுப்பு உலக வர்த்தகக் கழகத்திற்கு உள்ளது” என்றார்.