world

உக்ரைன்-ரஷ்யா நெருக்கடியை தீர்க்க ஆக்கப்பூர்வ பங்களிப்புக்குத் தயார் சீன ஜனாதிபதி பேச்சு

பெய்ஜிங், ஜூன் 16- சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங் உக்ரைன் விவகாரம் தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் புதனன்று தொலைபேசியில் உரையாடினார். இது குறித்து ரஷ்யாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான டாஸ் வெளியிட்டுள்ள செய்தியில், “  ரஷிய ஜனாதிபதி புதினை சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது உக்ரைன் நெருக்கடியைத் தீர்க்க உதவும் வகையில் ‘ஆக்கப்பூர்வமான பங்களிப்பை’ செலுத்த சீனா தயாராக உள்ளது.  சம்மந்தப்பட்ட அனைத்துத் தரப்பின ரும் ஒரு பொறுப்பான நிலைபாட்டை எடுக்க வேண்டும். அதன் மூலம் உக்ரைன்-ரஷ்யா இடையிலான பிரச்சனையில்  சரியான தீர்வை எட்ட முடியும்.  சீனா தனது ஆக்கப் பூர்வமான பங்களிப்பை தொடர்ந்து வழங்க தயாராக உள்ளது. உலக அளவில் அமைதியைப் பாதுகாப்பதிலும் தீவிர மாகப் பணியாற்றி வருவதோடு உரிய பங்களிப்பையும் செலுத்துகிறது.  உலகில் நிலையான பொருளாதாரக் கட்டமைப்பை சீரமைப்பதற்கும், ஒழுங்கைப் பேணுவதற்கும் சீனா தனது பங்களிப்பை செலுத்திவருகிறது என்று ஜீ ஜின்பிங் கூறினார் என அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கிடையில் உக்ரைனுக்கு எங்களது ஆதரவு தொடரும். உக்ரை னுக்கு நீண்ட காலத்திற்கு ஆதரவை வழங்க நேட்டோ நட்பு நாடுகள் தயாராக இருக்கின்றன என நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் வியாழனன்று பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற நேட்டோ பாதுகாப்பு அமைச்சர்களின் இரண்டாவது நாள் மாநாட்டு அமர்வுக்கு முன்னதாக தெரிவித்தார். உக்ரைனுக்கான ஆதரவை மேலும் அதிகரிக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் வெளியிட்ட அறிவிப்பை வரவேற்பதாகவும் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் கூறியுள்ளார். டாஸ் மற்றும் உக்ரைன்பார்ம் தகவல்களிலிருந்து

;