தேர்வில் முக்கிய அம்சங்கள்
• மாநாட்டுப் பிரதிநிதிகளைத் தேர்வு செய்யும் பணியில் ஜி ஜின்பிங்கின் தலைமையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு பெரும் கவனம் செலுத்தியது.
• மிகவும் கடுமையான தகுதிகள் பிரதிநிதி களுக்கு நிர்ணயிக்கப்பட்டன. கோட்பாடு, அரசியல் நேர்மை, பணி செய்யும் திறமை மற்றும் வாழ்க்கை முறை, அவர்களின் சொந்தப் பணியில் செயல்பாடு ஆகிய வற்றில் நல்ல திறன் கொண்ட கட்சி உறுப்பினராக அவர்கள் இருக்க வேண்டும்.
• பல தரப்பட்ட வயதினர் பிரதிநிதிகளாக ஆகி யிருக்கிறார்கள். சராசரி வயது 52.2 ஆக உள்ளது. அவர்களின் பெரும்பாலானோர் 1978-ஆம் ஆண்டில் சீர்திருத்தங்கள் தொடங்கிய பிறகு கட்சியில் சேர்ந்தவர் களாக இருக்கிறார்கள்.
• பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் பிரதிநிதிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் பொருளாதாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தேசப் பாதுகாப்பு, நீதித்துறை, மக்கள் பாதுகாப்பு, கல்வி, விளம்பரம், கலாச்சாரம், சுகாதார நலன், விளையாட்டு மற்றும் சமூக நிர்வாகம் ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்கள் பிரதிநிதிகளாக ஆகியிருக்கிறார்கள்.
தேர்வில் முக்கிய அம்சங்கள் • மாநாட்டுப் பிரதிநிதிகளைத் தேர்வு செய்யும் பணியில் ஜி ஜின்பிங்கின் தலைமையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு பெரும் கவனம் செலுத்தியது. • மிகவும் கடுமையான தகுதிகள் பிரதிநிதி களுக்கு நிர்ணயிக்கப்பட்டன. கோட்பாடு, அரசியல் நேர்மை, பணி செய்யும் திறமை மற்றும் வாழ்க்கை முறை, அவர்களின் சொந்தப் பணியில் செயல்பாடு ஆகிய வற்றில் நல்ல திறன் கொண்ட கட்சி உறுப்பினராக அவர்கள் இருக்க வேண்டும். • பல தரப்பட்ட வயதினர் பிரதிநிதிகளாக ஆகி யிருக்கிறார்கள். சராசரி வயது 52.2 ஆக உள்ளது. அவர்களின் பெரும்பாலானோர் 1978-ஆம் ஆண்டில் சீர்திருத்தங்கள் தொடங்கிய பிறகு கட்சியில் சேர்ந்தவர் களாக இருக்கிறார்கள். • பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் பிரதிநிதிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் பொருளாதாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தேசப் பாதுகாப்பு, நீதித்துறை, மக்கள் பாதுகாப்பு, கல்வி, விளம்பரம், கலாச்சாரம், சுகாதார நலன், விளையாட்டு மற்றும் சமூக நிர்வாகம் ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்கள் பிரதிநிதிகளாக ஆகியிருக்கிறார்கள்.
உறுப்பினர்களில் சிறந்தவர்கள்
தேர்வு செய்யப்பட்ட 2 ஆயிரத்து 296 பிரதிநிதிகளில் 771 பேர் முன்களப் பணியாளர்களாகப் பணியாற்றி வருகிறார்கள். 619 பேர் பெண்கள் மற்றும் 264 பேர் 40 பழங்குடிப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களாவர். இவர்களில் 85 வயதாகும் தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு நிபுணரான ஜோங் நான்ஷானும் ஒருவராவார். அதேபோன்று இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்த இளம் கம்யூனிஸ்டுகள் பலரும் பிரதிநிதிகளாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். மலைப்பகுதிகளில் வாழும் பெண் குழந்தைகளின் கல்விக்காகப் பெரும் பணியாற்றும் ஜாங் கில்மெய், குளிர்கால ஒலிம்பிக் போட்டி களில் பதக்கம் வென்ற வீராங்கனை வு டாஜிங் மற்றும் தேசிய சூப்பர் கம்ப்யூட்டர் மையத்தின் தலைமை விஞ்ஞானியான மெங் ஜியாங்பெய் ஆகியோர் பிரதிநிதிகளாகியிருக்கிறார்கள். இது தனக்குக் கிடைத்த பாராட்டு மட்டுமில்லாமல், பிரதிநிதி என்ற முறையில் பெரும் பொறுப்பும் தரப்பட்டிருக்கிறது என்று விஞ்ஞானி மெங் ஜியாங்பெய் குறிப்பிட்டுள்ளார். கட்சி உறுப்பினர்களில் சிறந்தவர்கள் பிரதிநிதிகளாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.