world

img

தீக்கதிர் உலக செய்திகள்

ஏஐ துறை கொள்கை ஆலோசகராக ஸ்ரீராம் கிருஷ்ணன் நியமனம் 

அமெரிக்காவின் ஏஐ தொழில்நுட்பத் துறை கொள்கை ஆலோசகராக  இந்திய வம்சாவளி யைச் சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணனை டொனால்டு டிரம்ப் நியமித்துள்ளார். அமெரிக்க வெள்ளை மாளிகையின் அறிவியல் தொழில் நுட்பக் கொள்கை துறையின் ஏஐ பிரிவின் மூத்த கொள்கை ஆலோ சகராக ஸ்ரீராம் கிருஷ்ணன் செயல்படுவார் என டிரம்ப் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். கிருஷ்ணன் கடந்த காலங்களில் மைக்ரோசாஃப்ட், டுவிட்டர், யாஹு, பேஸ்புக், ஸ்நாப் போன்ற நிறுவனங்களில் பணிபுரிந்தவர். 

சிரியா மீதான தடைகளை நீக்க துருக்கி அழைப்பு  

சிரியா மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை  மிக விரைவில் நீக்க வேண்டும் என்று துருக்கி வெளி யுறவுத் துறை அமைச்சர் ஹக்கன் ஃபிடன் அழைப்பு விடுத்துள்ளார். சிரியாவின் புதிய தலைவராக நிய மிக்கப்பட்டுள்ள பயங்கர வாத அமைப்பின் தலைவர் அல்-ஜொலானி உடன் நடத்திய கூட்டு செய்தியா ளர் சந்திப்பின் போது இதனை அவர் தெரிவித் துள்ளார். சிரியா மீண்டு வருவதற்கு சர்வதேச  சமூகம் அணிதிரண்டு உதவ வேண்டும் என கூறியுள்ளார். பயங்கரவாதிகளின் படை சிரியாவை கைப்பற்ற துருக்கி தொடர்ந்து உதவிகள் செய்தது குறிப்பிடத்தக்கது.