காசாவில் உணவு விநியோக மையத்தின் மீது தாக்குதல்
காசாவில் உணவு விநியோக மையத்தின் மீது இஸ்ரேலின் ராணுவம் குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளது. உணவு பற்றாக் குறையால் காசா வில் ஒவ்வொரு நாளும் பட்டினி யின் கொடுமை மிகத்தீவி ரமாக அதிகரித்து வருகிறது என தினந்தோறும் ஐநா அறிக்கைகள் எச்சரிக்கின்றன. இந்நிலையில் மத்திய காசாவில் உள்ள நுசிராத் அகதிகள் முகாமில் உணவு விநியோக மையம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தி நான்கு குழந்தைகள் உட்பட ஐந்து பேரை படுகொலை செய்துள்ளது.
பொருளாதார வழித்தட ஒத்துழைப்பை பலப்படுத்தும் நேபாளம் - சீனா
நேபாள பிரதமர் சர்மா ஓலி நான்கு நாள் அரசுமுறை பயணமாக சீனா சென்றுள்ளார். இப்பயணத்தில் சீனாவின் பொரு ளாதார வழித்தட மான பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தை உயிர்ப்பித்துள்ளது நேபாள அரசு. 2017 இல் இரு நாடுகளும் இத்திட்டத்தில் இணைந்து செயல்பட ஒப்புக்கொண்ட நிலையில் அதற்கான முன்னெடுப்புகள் நடக்கவில்லை. தற்போது மீண்டும் இத்திட்டத்தை இரண்டு நாடுகளும் மீண்டும் முன்னெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரேசிலில் 80 லட்சம் மக்கள் வறுமையில் இருந்து வெளியேற்றம்
2023 கணக்கீட்டின் படி பிரேசி லில் மொத்தம் 87 லட்சம் மக்கள் வறுமையிலிருந்து வெளியேற்றப் பட்டுள்ளனர். அந் நாடு வெளியிட் டுள்ள அறிக்கை யின் படி 2022 இல் 31.6 சதவீதமாக இருந்த வறுமை யின் அளவு 2023 இல் 27.4 சதவீத மாகக் குறைந்துள் ளது. இது 2012 க்குப் பிறகு மிகக் குறைந்த அளவாகும். லூலா அரசின் சமூக நலத்திட்ட உதவிகளின் காரண மாக சமத்துவ மின்மை அதிகரிக்காமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வங்கதேச சிறையிலிருந்து தப்பித்த 700 கைதிகள் பிடிபடவில்லை
வங்கதேசத்தில் மாணவர்கள் போராட் டம் கலவரமாக மாற்றப்பட்ட போது தலை நகர் டாக்காவில் உள்ள சிறையில் போராட்டக்காரர்கள் தீவைத்ததில் 100க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பித்த னர்.மேலும் நாடு முழுவதும் பல சிறை களில் இருந்து 2,200 கைதிகள் தப்பித்து விட்டதாக சிறைத் துறை அறிவித்திருந் தது. போராட்டம் முடிவுக்கு வந்த பிறகு பல கைதிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் சுமார் 700 கைதிகளை கைது செய்ய முடியவில்லை. அவர்கள் தலைமறைவாகி விட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.