world

உக்ரைன்-ரஷ்யா போர் கள நிலவரம்

►அமெரிக்க பொருளாதாரம் மந்த நிலையை நோக்கி செல்கிறது என முன்னாள் நிதி அமைச்சர் லேரி சம்மர்ஸ் எச்சரித்துள்ளார். ரஷ்யாவை சுட்ட அமெ ரிக்கா தன் காலையும் சுட்டுக்கொண்டது போலும்!

►ரஷ்யாவின் பிடியில் உள்ள உக்ரைனின் டான் டெஸ்க் பகுதியில் மக்கள் வாழும் இடங்களை  உக்ரைன் ராணுவம் தொடர்ந்து தாக்கி வருகிறது. குழந்தைகள் உட்பட பலர் உயிரிழப்பு. மேற்கத்திய நாடுகள் கள்ள மவுனம்! ஐ.நா. கண்டனம்!

►தனது நாட்டின் அகதிகளை ஜெர்மனி சரியாக வர வேற்று கவனித்து கொள்ளவில்லை என உக்ரைனின்  ஜெர்மனிக்கான தூதர் ஆன்ட்றே மெல்னிக் கொந்த ளித்துள்ளார்.  ஜெர்மனி இதனை கடுமையாக மறுத் துள்ளது. 

►பனிப்போருக்கு பின்னர் இப்பொழுது அணு ஆயுத பயன்பாடின் ஆபத்து அதிகரித்துள்ளது என சர்வதேச அமைதிக்கான ஆராய்ச்சி நிலையம் அபாய மணி அடித்துள்ளது.

►உக்ரைன் போரில் ரஷ்யா பக்கமும் நியாயம் உள்ளது என கூறிய பல இத்தாலி பிரபலங்களை அந்த நாட்டின் பத்திரிகை புகைப்படங்களை வெளியிட்டு அவர்களின் அரசு சலுகைகளை பறிக்க வேண்டும் என கோரியுள்ளது.  வாழ்க மேற்கத்திய ஜனநாயகம்!

►ஆயுத பற்றாக்குறையால் டான்பாஸ் பகுதியில் உக்ரைன் தோல்வி முகத்தில் உள்ளது என அமெ ரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் பத்திரிகை கட்டுரை தீட்டியுள்ளது. மேற்கத்திய பத்திரிகைகள் மெதுவாக தமது சுருதியை மாற்ற தொடங்கியுள்ளனவா?

►மரியபோல் நகரில் நிகழ்ந்தது போல இன்னொரு முக்கிய நகரமான செவரோடோன்டெஸ்க் நகரிலும் உக்ரைன் படையினர் “அசோட்” எனும் ரசாயன ஆலையில் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களுக்கு ஆயுதங்களும் உணவும் கிடைக்காத வகையில் ரஷ்ய படைகள் சுற்றி வளைத்து  வருகின்றனர். 

►ரகசியமாக ரஷ்ய உரங்களை வாங்க விவசாய மற்றும் போக்குவரத்து நிறுவனங்களை அமெரிக்கா ஊக்கு வித்து வருவதாக செய்திகள் கசிந்துள்ளன. தனக்கு தேவை எனில் அமெரிக்கா இரண்டு வேடங்களை அல்ல தசவதார வேடங்களை கூட போடும்!