world

img

கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்ய மறுப்பு

கொழும்பு, ஏப்.7- மோசமான பொருளாதார நெருக்கடி யால் இலங்கையில் 2.2 கோடி மக்கள் பட்டினியால் வாடுவார்கள் என நாடாளு மன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா எச்ச ரித்துள்ளார். இலங்கையில் உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு உச்சத்தில் உள்ளது. பணவீக்கம், மின் பற்றாக்குறையால் மக்கள் பட்டினி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 1948இல் சுதந்திரம் பெற்ற பின்னர் நாடு எதிர்கொ ண்டுள்ள மிகப்பெரிய நெருக்கடி இது வாகும் எனவும், இது ஆரம்பம்தான் என வும் அவர் தெரிவித்துள்ளார். நிதி நெருக்கடி தொடர்பான இரண்டு நாள்  விவாதத்தில் கலந்துகொண்டு உரை யாற்றுகையில் அவர் இவ்வாறு தெரி வித்தார். நாட்டில் மக்கள் எழுச்சி ஏற்பட்டுள் ளது. அரசாங்கம் பெரும் பான்மையை இழந்துள்ளது. ஆனாலும் தான் பதவி விலகப் போவதில்லை என  ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே தெரி வித்துள்ளார். என்ன நடந்தாலும்  ராஜினாமா செய்யப் போவதில்லை

என வும், அரசாங்கம் பிரச்சனைகளை எதிர் கொள்ளும் எனவும் பிரதம அமைச்சர் ஜான்ஸ்டன் பெர்னாண்டோ தெரி வித்துள்ளார். இதனிடையே அடக்குமுறையை எதிர்த்து இலங்கையில் மக்கள் போராட்டம் வெடித்து வருகிறது. போராட்டக்காரர்களை கலைக்க பாது காப்புப் படையினர் கண்ணீர் புகை, தண்ணீர் பீரங்கி மற்றும் ரப்பர் தோட்டாக் களை பயன்படுத்தினர். சுமார் 60 பேர் கைது செய்யப்பட்டனர். போலீஸ் காவ லில் தாங்கள் கொடூரமாக சித்ரவதை  செய்யப்பட்டதாக மக்கள் தெரிவித்த னர். அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம்கொண்டு வருமா என்பது உறுதிசெய்யப்பட வில்லை. இதனிடையே நோயாளி களுக்கு மருந்து கிடைக்கவேண்டும் என்றும், நாட்டில் மருந்து பற்றாக்குறை ஏற்படக் கூடாது என்றும் வலியுறுத்தி, இலங்கையில் மருத்துவர்கள் புதனன்று நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தினர். தவறான நிர்வாகம்  அரசின் தவறான நிர்வாகம், பல ஆண்டுகளாக கடன் வாங்குவது மற்றும் தேவையற்ற வரிச்சலுகைகள் போன்ற வற்றால் நெருக்கடி அதிகரித்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்ற னர். இலங்கையின் 51 பில்லியன் டாலர் (தோராயமாக ரூ. 3,87,198 கோடி) கடன்  பற்றி மதிப்பீட்டு முகவர்கள் முன்னதாக எச்சரித்திருந்தனர். உர இறக்குமதியை தடை செய்வது நாட்டில் பஞ்சத்தை ஏற்படுத்தும் என கடந்த டிசம்பர் மாதம் விவசாய செயலாளர் உதித்  ஜயசிங்க எச்சரித்திருந்தார். ஆனால்  சில மணிநேரங்களில் அவர் அந்த பொறுப்பில் இருந்து வெளியேற்றப் பட்டார்.