world

img

‘வரியைக் கட்டுங்கள்’

  1.  சூதாட்டங்களை நடத்தி வரும் வெளிநாட்டு நிறுவனங்களை அப்படியே விட்டுவிடமாட்டோம் என்று பின்லாந்தின் பிரதமர் சன்னாமரின் தெரிவித்துள் ளார். சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்த நிலையில், ஆபத்தான இந்த சூதாட்டத்தைக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
  2.  சூதாட்டங்கள் பல நாடுகளை சீர்குலைத்தது போலவே, பின்லாந்தையும் ஆட்டி வைக்கிறது. பல உயிர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து  செயல்படும் பல்வேறு நிறுவனங்கள் பின்லாந்தின் சட்டங்களுக்குக் கட்டுப்படாமல் இருக்கின்றன. எந்தவித ஒழுங்குமுறை ஏற்பாடும் செய்யப்படாததால் அந்நிறுவனங்கள் சட்டங்களைப் பற்றிக் கவலைப்படவில்லை.
  3.  குறைந்தது மூன்றில் ஒருவர், வாரத்திற்கு ஒரு முறை யாவது சூதாட்டத்தில் பங்கேற்கிறார். 2022-ஆம் ஆண்டில், பின்லாந்தைச் சேர்ந்தவர்களில் 83 விழுக் காட்டினர் குறைந்தது ஒருமுறையாவது சூதாட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள்.மிகவும் தீவிரமான முறையில் எதிர்கொள்ளவேண்டிய பிரச்சனையாக சூதாட்டம் மாறியுள்ளதால் முதல் கட்டமாக வரியைக் கட்டுங்கள் என்று அரசு கூறியுள்ளது.  
;