world

img

2021இல் 77 குழந்தைகள் படுகொலை இஸ்ரேலின் வெறித்தனம்

வாஷிங்டன், ஜன.31- 2021 ஆம் ஆண்டில் மட்டும் இஸ் ரேலின் தாக்குதல்களுக்கு 77 பாலஸ்தீனக் குழந்தைகள் பலியா கின என்று அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு அரசு சாரா நிறுவனம் ஆவணப் படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பல சமூக ஆர்வலர்கள் மற்றும் அமைப்பு கள், பாலஸ்தீனத்திற்கு எதிராக இஸ்ரேலுக்கு ஏராளமான நிதியை அமெரிக்க அரசு தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தங்கள் கருத்துக்கு ஆதரவு திரட்டவே இரண்டு நிமிடம் ஓடும் ஆவணப் படம் ஒன்றையும் தயாரித்துள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் 77 குழந்தை கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதை அந்த ஆவணப்படத்தில் படமாக்கியுள்ளனர்.  “இது அமெரிக்கர்களுக்குத் தெரிந்தால்” என்ற தலைப்பிலான அந்த ஆவணப்படம் சமூக வலைத் தளங்களில் பரவி வருகிறது. எந்த சூழலில் அந்தக் குழந்தைகள் கொல் லப்பட்டார்கள் என்பதையும் அந்த  ஆவணப்படம் சொல்கிறது.

எவ்வ ளவு பணம் அமெரிக்காவில் இருந்து இஸ்ரேலுக்கு செல்கிறது என்பதை யும் அந்த ஆவணப்படம் மக்களுக்கு புள்ளிவிபரங்களோடு தருகிறது. இந்த உதவிகள் எப்படிப்பட்ட கொடூ ரங்களை இழைக்கின்றன என்பதை அம்பலப்படுத்தும் நோக்கத்தில்  இதுபோன்ற பல ஆவணப்படங்களை இந்த அரசு சாரா நிறுவனம் உரு வாக்கியுள்ளது. இஸ்ரேலுக்குக் கிடைக்கும் நிதி யுதவி பற்றிக் கருத்துத் தெரி வித்துள்ள அந்த நிறுவனம், “2020 ஆம் ஆண்டில் ஒரு நாளைக்கு சரா சரியாக ஒரு கோடி டாலரை ராணுவ உதவியாக அமெரிக்கா தந்திருக்கி றது. அதே வேளையில் பாலஸ்தீனர்க ளுக்கு ராணுவ ரீதியான உதவி எதை யுமே செய்யவில்லை.” என்று கூறி யுள்ளது. மனிதாபிமான ரீதியான உதவி களைச் செய்கிறோம் என்று அமெரிக்கா சொன்னாலும், இஸ்ரேலின் மனிதாபி மானமற்ற தாக்குதல்களுக்கு தொடர் உதவி செய்து வருகிறது.

அமெரிக்க நாடாளுமன்ற உறுப் பினர்களுக்கு ஒரு வேண்டுகோளை இந்தத் தொண்டு நிறுவனம் வைத்துள்ளது. நாடாளுமன்றக்குழு கூட்டங்கள் நடக்கும்போது இந்தப் படத்தைப் பார்வையிடுமாறும், பிற உறுப்பினர்களுக்கும் அந்தப் படத்தை வழங்குமாறும் கேட்டி ருக்கிறார்கள். பாலஸ்தீன மக்க ளுக்கு எதிராக இஸ்ரேல் செய்யும் வன்கொடுமைகள் மற்றும் கொடூ ரங்கள் ஆகியவை பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்ல முடியும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 2000ஆவது ஆண்டில் இருந்து தற் போது வரையில் சுமார் 2 ஆயிரத்து 200 பாலஸ்தீனக் குழந்தைகள் கொல்லப் பட்டிருக்கிறார்கள் என்ற அதிர்ச்சிகர மான தகவலையும் இந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.