world

பேச்சுவார்த்தை

மெக்சிகோ சிட்டி,  மே 19- வெனிசுலாவில் எதிர்க்கட்சிக ளுடனான பேச்சுவார்த்தையை அரசு மீண்டும் தொடங்கியுள்ளது.  வெனிசுலாவின் தேசிய அவைத் தலைவரான ஜோர்ஜ்  ரோட்ரிகஸ்  இதை உறுதிப்படுத்தியுள்ளார். எதிர்க்கட்சிகளின் பிரதி நிதிக்குழுத் தலைவரான ஜெரார்டோ பிளைடு உள்ளிட்டோரோடு பேச்சுவார்த்தை நடந்துள்ளது.  மெக்சிகோவில் நடந்த இந்தப் பேச்சுவார்த்தை மீண்டும் நடத்தப் படும் என்று தெரிவித்த அவர், “இந்தக்கூட்டத்தில் வருங்காலத் திற்கான திட்டங்கள் குறித்துப் பேசி னோம்” என்றார். மெக்சிகோவின் தலைநகர் மெக்சிகோ சிட்டியில் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இந்தப் பேச்சுவார்த்தை தொடங்கியது. சில பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொள்ள அமெரிக்கா முன்வந்துள்ளதால், இந்தப் பேச்சுவார்த்தை மீண்டும்  முன்னேற்றம் காணத் தொடங்கி யுள்ளது.

;