world

img

மொரேல்ஸ் பாராட்டு

சுக்ரே, மே 18- சில நாடுகளை மட்டும் ஒதுக்கி வைத்துவிட்டு அமெரிக்க நாடுகளின் உச்சிமாநாடு ஒன்றை நடத்தும் அமெரிக்காவின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தலைவர்களுக்கு பொலிவியாவின் முன்னாள் ஜனாதிபதி இவோ மொரேல்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். ஜூன் மாதத்தில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் அமெரிக்க நாடுகளின் உச்சிமாநாடு நடத்தத் திட்டமிட்டுள்ளார்கள். இந்த மாநாட்டிற்கு நிகரகுவா, வெனிசுலா மற்றும் கியூபா ஆகிய நாடுகளுக்கு அழைப்பு இல்லை. அமெரிக்காவின் நிர்ப்பந்தத்தால் இந்த முடிவை எடுத்துள்ளனர். இந்த முடிவுக்கு பொலிவியா ஜனாதிபதி லூயிஸ் அர்ஸ், மெக்சிகோ ஜனாதிபதி லோபஸ் ஓப்ரடார் மற்றும் சில கரீபிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தாங்களும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என்றும் அறிவித்து விட்டார்கள். இது தைரியமான முடிவு என்று மொரேல்ஸ் பாராட்டியுள்ளார்.

;