world

இந்தியா-சீனா இடையே 125 பில்லியன் டாலர் மதிப்பில் வர்த்தகம்

பெய்ஜிங்,ஜன.16- இந்தியா, சீனா இடையே கடந்த ஆண்டு 125 பில்லியன் டாலருக்கும் மேல் வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பாக சீனாவில் இருந்து வெளியாகும் குளோபல் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், 2021 ஆம்  ஆண்டில் இந்தியா மற்றும் சீனா இடையே 125.66 பில்லியன் டாலருக்கு வர்த்தகம் நடை பெற்றுள்ளது. கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகை யில் இது 43 சதவீதம் அதிகம். சீனாவில் இருந்து இந்தியாவுக்கு கடந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான ஏற்றுமதி 97 பில்லியன் டாலராக இருந்தது. இது  கடந்த ஆண்டைவிட46 சதவீதம் அதிகம்.  இதே போல், இந்தியாவில் இருந்து சீனாவுக்கு கடந்த  ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான ஏற்றுமதி 28 பில்லியன் டாலராக அதி கரித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 34 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலையால் இந்தியாவுக்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. இத னால் மருத்துவப் பொருள்கள் சீனாவில் இருந்து  ஏற்றுமதி செய்யப்பட்டன. இதனாலேயே இந்தியா மற்றும் சீனா இடையிலான வர்த்தகம் 100 பில்லியன் டாலரை தாண்டியுள்ளது என்று தெரிவித்துள்ளது.

;