world

img

ஆங்-சான்-சூகிக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

யாங்கோன்,டிச.6- மியான்மரில் ஆங் சான் சூகிக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  மியான்மரில் கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆங் சான் சூகியின் தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி மாபெரும் வெற்றிபெற்றது.  ஆனால், பொதுத் தேர்தலில் வாக்கா ளர்களை மோசடி செய்ததாகக் கூறி இராணு வம் அதிகாரத்தைக் அராஜகமாக கைப்பற்றி யது.  தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெற்றதாக தேர்தல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

இதனை பொருட்படுத்தாமல், மியான்மர் ராணுவம்  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட  ஆங் சான் சூகியின் தலைமையிலான சிவில் அரசாங்கத்தை கவிழ்த்தது. மேலும் அவரை வீட்டுக் காவலில் வைத்தது. ஆங் சான் சூகியின் மீது ஊழல் வழக்கு கள், அலுவல் ரீதியான ரகசிய சட்டங்களை மீறுதல் உள்ளிட்ட அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. ஆங் சான் சூகி, கருத்து வேறுபாடுகளை தூண்டும் விதமாக நடந்து கொண்டார் என்றும் கொரோனா விதிகளை மீறி உள்ளார் என்றும் குற்றம்சாட்டப்பட்டது. அவர்  மீது மொத்தம் 11 குற்றச்சாட்டுகள் முன்வைக்க ப்பட்டுள்ளன.

ஆனால் அவற்றை  ஆங் சான் சூகி மறுத்துள்ளார்.இருந்தாலும் அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆங் சான் சூகியுடன் சேர்த்து மியான்ம ரின் முன்னாள்  ஜனாதிபதியும்  ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக லீக் கூட்டணியில் இருந்தவருமான வின் மைண்ட்க்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளுக்கு கடும் கண்ட னம் எழுந்துள்ளது. மனித உரிமைகளுக்கான ஆசியான் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலைவர்  சார்லஸ் சாண்டியாகொ  ‘நீதிக்கு  எதிராக நடைபெறும் கேலிக்கூத்து இது’  என்று கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். மியான்மரின் தேசிய ஒற்றுமை அரசாங்கத்தின் செய்தித்தொடர்பாளர் கூறு கையில், “ஆங் சான் சூகியை 104 ஆண்டுகள் சிறையில் அடைக்க இராணுவம் முடிவு செய்துள்ளது. அவர் சிறையில் வைத்து மரணம் அடைவதை அவர்கள் விரும்புகின்றனர்” என்று கூறியுள்ளார்.