world

img

போல்சானாரோவுக்கு பின்னடைவு

லிஸ்பன், ஜூலை 5- தனது போட்டியாளராக லூலா டா சில்வாவை சந்திக்க வேண்டாம் என்று பிரேசிலின் ஜனாதிபதி ஜெய்ர் போல்சானாரோ கேட்டுக் கொண்டபோதும், அவரை சந்தித்து பல்வேறு பிரச்சனைகள் பற்றி போர்ச்சுகல் ஜனாதிபதி மார்செலோ ரிபெலோ டி சவுசா ஆலோசனை நடத்தியுள்ளார். அக்டோபர் மாதத்தில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் போல்சானாரோவை எதிர்த்து தொழிலாளர் கட்சித் தலைவரும், பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதியுமான லூலா டி சில்வா போட்டியிடவிருக்கிறார். கருத்துக் கணிப்பு களின்படி, இந்தத் தேர்தலில் இரண்டாவது சுற்றிற்கான தேவை இருக்காது என்று தெரிகிறது. சில நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள போர்ச்சுகல் ஜனாதிபதி டிசவுசா பிரேசில் சென்றுள்ளார். லூலாவைச் சந்திக்க திட்டமிட்டிருந்ததால் அவரை சந்திக்க வேண்டாம் என்று போர்ச்சுகல் ஜனாதிபதியை போல்சானாரோ வலியுறுத்தியிருக்கிறார்.  போர்ச்சுகல் ஜனாதிபதியுடனான அரசு ரீதியான சந்திப்பை போல்சானாரோ ரத்து செய்து விட்டார். ஆனால், அதைக் கண்டு கொள்ளாமல் லூலாவைச் சந்தித்து உரையாடியிருக்கிறார். இருவரும் ஐரோப்பாவில் உள்ள அரசியல் நிலைமை, லத்தீன் அமெரிக்காவின் நிலவரம் மற்றும் உக்ரைனில் நடந்துவரும் போர் ஆகியவை பற்றி விவாதித்திருக்கிறார்கள்.