world

img

தீக்கதிர் உலக செய்திகள்

அமெரிக்க இறைச்சிக்கு  கொலம்பியா தடை 

அமெரிக்காவில் மாடுகளுக்கு பற வைக் காய்ச்சல் தொற்று பரவி வரும் நிலையில் அந்நாட்டிலிருந்து மாட்டிறை ச்சியை இறக்குமதி செய்ய கொலம்பியா தடை விதித்துள்ளது. உலகளவில் பறவைக்காய்ச்சல் தொற்று அதிகரித்து வரும் நிலையில் அமெரி க்காவில் இருந்து இறைச்சி இறக்குமதிக்கு தடை விதித்த முதல் நாடாக கொலம்பியா உள்ளது. மேலும் இந்த தடை தற்காலிகமான ஒன்று தான் என்றும் தொற்று பாதிப்பு குறைந்த பிறகு இந்த தடை நீக்கப்படும் எனவும்  தெரிவித்துள்ளது.

அதிக வெப்பத்தால்  வங்கதேச பள்ளிகள் மூடல்

வங்கதேசத்தில் 42 டிகிரி செல்சியஸ்  (108 பாரன்ஹீட்) வரை  வெப்ப நிலை நிலவுவதால்  பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மோசமான வெப்பநிலையால் இந்த  மாதம் மட்டும் 4 முறை வங்கதேச வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காலநிலை மாற்றத்தால்  ஆசிய நாடுகளில் அதிக வெப்ப அலை வீசி வருகிறது. குறிப்பாக வங்கதேசம் போன்ற ஏழை நாடுகள் மிக கடுமையான பாதிப்பை சந்தித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் உள்ள குடிமக்களுக்கு  பாஸ்போர்ட் மறுக்கும் உக்ரைன்  

ராணுவத்தில் சேரும் வயதுடைய உக்ரைன் ஆண்கள் வெளிநாட்டில் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்படாது என அந்நாடு அறிவித்துள்ளது. புது பாஸ்போர்ட் மட்டு மின்றி ஏற்கனவே வழங்கியுள்ள பாஸ்போர்ட்டுக்கான  புதுப்பித்தலையும் நிறுத்தியுள்ளது. கட்டாய ராணுவ சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே உக்ரைன் இவ்வாறு அறிவித்துள்ளது என அந்நாட்டு குடி மக்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

மழையால் சேதமான சிறை : கைதிகள் தப்பியோட்டம் 

நைஜீரியாவில் ஏற்பட்ட கனமழையால் தலைநகருக்கு அருகிலுள்ள சுலேஜா சிறைச்சாலை யில் இருந்து  118 கைதிகள் தப்பியோடியதாக அந்நாட்டு சிறைத்துறை செய்தித் தொடர்பாளர் அடமு துசா தெரிவித்துள்ளார். பல  மணிநேரம் நீடித்த கன மழையால்  சிறைச்சாலை யின் சில பகுதிகளில் சுற்றுச்சுவர் மற்றும் சுற்றி யுள்ள கட்டிடங்கள் உடைந்தன. அப்போது கைதிகள் தப்பியதாக செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள் ளார். 

வேறுபாடுகளை கவனமாகக் கையாள  பிளிங்கன் வேண்டுகோள்

அமெரிக்காவும் சீனாவும் தங்கள் வேறுபாடுகளை கவனமாகக் கையாள  அமெரிக்க வெளியுறவுத் துறை செய லாளர் ஆண்டனி பிளிங்கன்  அழைப்பு விடுத்துள் ளார். சீனாவின் வளர்ச்சியைக் கண்டு அதன்  மீது பல தடைகளை அமெரிக்கா விதித்து வரு கிறது. இஸ்ரேல் - பாலஸ்தீன போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ள சூழலில் இரு நாடுகளுக்கிடையேயான  முரண்பாட்டை சரி செய்ய  சீன  தலைநகர்   பெய்ஜிங் சென்றுள்ள பிளிங்கன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

;