world

img

வெனிசுலாவின் மற்றொரு சாதனை: வீடில்லாதோருக்கு 41,00,000 வீடுகள்

காரகஸ், ஜூன் 25- வெனிசுலாவில் வீடில்லாதோருக்கு வீடுகளைக் கட்டித் தரும் திட்டத்தின் கீழ் இதுவரையில் 41 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. 41 லட்சமாவது வீட்டின் சாவியை வழங்கும் நிகழ்ச்சியில் வெனிசுலாவின் ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ கலந்து கொண்டார். அதில் பேசிய அவர், ‘‘இப்போது, இந்த நேரத்தில் நாங்கள் 41 லட்சமாவது வீட்டை வழங்குகிறோம். எந்த சமயத்தில் இதை வழங்குகிறோம் என்பதை  விட, இதற்கான முயற்சிகளை அங்கீகரிக்க வேண்டியது அவசியமாகும்.  பொலி வாரிய அரசியல் அமைப்பில் என்ன உறுதிமொழி தரப்பட்டிருக்கிறதோ அதன் அடிப்படையில்தான் இந்த வீடுகள் கட்டி  வழங்கப்பட்டு வருகின்றன. புதிய தலை முறைக்குத் தேவையான பாதுகாப்பை இந்த வீடுகள் வழங்கும்’’ என்றார். வெனிசுலா சமூக வீட்டுவசதி பெருந் திட்டத்தின் கீழ் இந்த வீடுகள் கட்டப் பட்டுள்ளன. 2011 ஆம் ஆண்டில் அப்போ தைய ஜனாதிபதி ஹியூகோ சாவேசால் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. ஒரே ஆண்டில் 3 லட்சத்து 50 ஆயிரம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த இலக்கை அடைந்ததோடு, தற்போது பத்தாண்டுகள் கழிந்த நிலையில் 41 லட்சம் வீடுகள் வீடில்லாதோர் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மிகப் பெரும் அளவில் தேவையுள்ளவர்களுக்கு பல னளிக்கும் வகையில் மேலும் நிதியை ஒதுக்கு வதற்கு நிகோலஸ் மதுரோ ஒப்புதல் அளித்துள்ளார்.

திட்டத்தை செயல்படுத்தும் அலுவலர்க ளுக்கு அவர் வேண்டுகோள் ஒன்றையும் அவர் விடுத்தார். மக்களின் தேவை பற்றிய புரிதல் மற்றும் மரியாதை உள்ளிட்ட சோச லிச மதிப்புகளை உணர்த்தும் வகையில், இந்தத் திட்டம் தொடர வேண்டும் என்றும் ஜனநாயகத்தில் மக்கள் பங்கேற்க இத்த கைய பலன்கள் உதவும் என்றும் மதுரோ குறிப்பிட்டார். வீடுகளைப் பெற்றுக் கொண்டு அதில் வசிக்கப் போகும் வீட்டு உரிமையாளர்களும், ஒரு புதிய வாழ்க்கையை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பயனாளிகளில் பலரும், வெனிசுலா வின் வரலாற்றில் எந்த அரசும் ஏழைகளைப் பற்றிக் கவலைப்படவில்லை. சாவேஸ் பொறுப்பிற்கு வந்தபிறகுதான் அடிப்படை வசதிகள் இல்லாதவர்களின் பிரச்சனைகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன என்கிறார்கள். 2017 ஆம் ஆண்டிற்குள் 20 லட்சம் வீடுகள் என்று சாவேஸ் உறுதி யளித்திருந்தார். அவர் உயிரிழந்து விட்டா லும், அவருக்குப் பின் பொறுப்பேற்ற நிகோலஸ் மதுரோ அந்த உறுதியை நிறை வேற்றும் வகையில் பணியைத் தொடர்ந்தார். தற்போது அந்த இலக்கு நிறைவேற்றப்பட்டு, வீடுகளின் எண்ணிக்கை 41 லட்சத்தைத் தொட்டுவிட்டது. 

;