world

img

பாலஸ்தீன மக்களுக்காக ஜெர்மனியிலிருந்து காசா வரை சைக்கிள் பயணம் செய்யும் இளைஞர்

அபித் ஹாசன், ஜெர்மனியில் உள்ள தனது வீட்டிலி ருந்து சைக்கிள் மூலமாக காசாவை அடையும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அபித்தைப் பொறுத்தவரை, இந்தச் சைக்கிள் பயணம் மிகவும் முக்கியமானது. இந்த பயணத்தின் நோக்கம் பற்றி அவர், “சைக்கிள் மூலம் பாலஸ்தீனம் செல்வது எனது நீண்ட நாள் கனவு. சுவிட்சர்லாந்து மற்றும் ஆல்ப்ஸ்  மலைகளுக்கும் சைக்கிளில் செல்ல வேண்டும். காசாவில் உள்ள ஒரு மருத்துவ மனைக்கு நிதி திரட்ட இதைச் செய்யலாம் என முடிவெடுத் தேன். அங்கு மருத்துவ அமைப்பு அழிந்து வருகிறது.” என்று கூறுகிறார். அபித் இதுவரை பத்து நாடுகளின் வழியாக சைக்கிள் பயணம் செய்து துருக்கியை அடைந்துள்ளார்.