world

img

இஸ்ரேலுக்கு போப் கண்டனம்!

லெபனான் மீது கொலைவெறித் தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேலை போப் கண்டித்துள்ளார்.

ஹிஸ்புல்லாவை குறிவைத்து லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்களைக் கொன்றதை ஏற்றுக்கொள்ளவே முடியாதது. லெபனானில் இருந்து வெளிவரும் செய்திகள் கவலையளிக்கிறது.

இந்த பயங்கரமான போர் விரிவாக்கத்தை தடுக்க சர்வதேச சமூகம் எல்லா முயற்சிகளையும் எடுக்கும் என்று நம்புகிறேன்.லெபனான் மக்கள் ஏற்கனவே சமீப காலங்களில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு போர் பதட்டம் அதிகரித்து வருவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது என இஸ்ரேலை போப் கண்டித்துள்ளார்.