world

img

135 ஆண்டுகள் முன் எழுதப்பட்ட கடிதம்!

இங்கிலாந்தில் 135 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கடிதம் கிடைத்துள்ளது. 

இங்கிலாந்தில் எலியத் ஸ்டிம்சன் என்ற பெண் தனது வீட்டில் இருந்த ரேடியேட்டரை நகர்த்துவதற்காக பிளம்பரை வர வைத்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த பலகை தரையில் இருந்த ரேடியேட்டரை நகர்த்தி அதனை வெட்டிய போது பலகைக்கு அடியில் காலி பாட்டில் ஒன்றிற்குள் சுருட்டப்பட்ட காகித துண்டும் இருந்துள்ளது. 

உடனடியாக இது பற்றி எய்லித்திடம் அந்த பிளம்பர் தெரிவித்துள்ளார். அதனை திறந்து காகிதத்தை படிக்க விரும்பிய  எய்லித் அவரது பிள்ளைகள் இரண்டு பேர் வரையும் அவர் ஆர்வத்துடன் காத்திருந்துள்ளார். குடும்பத்தினர் அனைவரும் வந்த பிறகு, அந்த பாட்டிலுக்குள் இருந்த காகிதத்தை பிரித்து படித்து பார்த்துள்ளனர்.

அப்போது அதில் இருந்த விஷயத்தை பார்த்து, எய்லித்தின் குடும்பத்தினர் வியப்பில் ஆழ்ந்து போயுள்ளனர். அந்த காகிதத்தில், "ஜேம்ஸ் ரிச்சி மற்றும் ஜான் க்ரீவ் ஆகியோர் இந்த தளத்தை அமைத்தனர். ஆனால், அவர்கள் இதில் இருந்த மதுவை குடிக்கவில்லை. அக்டோபர் 6 ஆம் தேதி 1887" என குறிப்பிட்டு இந்த பாட்டிலை கண்டுபிடிப்பவர்கள் நாங்கள் இறந்து விட்டதாக நினைப்பார்கள் என்றும் அதில் இருந்துள்ளது. இது தொடர்பாக எய்லித்தின் நண்பர் ஒருவர் சில ஆய்வுகள் மேற்கொண்டு 1880 களில் அங்கே வாழ்ந்த நபர்கள் பற்றிய விவரத்தை சேகரித்து வருகிறார்.

தற்போது 135 ஆண்டுகள் பழமையான அந்த கடிதம் குறித்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.