world

img

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 6.30 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 6.30 கோடியைத் தாண்டியுள்ளது. 
கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று இன்று உலகம் முழுவதும் பரவி உள்ளது 
இந்நிலையில்  நவ.30-ம் தேதி நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 6 கோடியே 30 லட்சத்து  72 ஆயிரத்து 905 ஆக உயர்ந்துள்ளது.தொற்று பாதிப்புக்கு இதுவரை 14,65,186 பேர் உயிரிழந்துள்ளனர். 4,35,46,236 போ் குணமடைந்துள்ளனா். சுமாா் 1,80,61,483 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 1,05,337 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
உலகில் கொரோனா தொற்றால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது.  அங்கு இதுவரை  1,37,50,404 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 2,73,072 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும் 81,07,203 பேர் குணமடைந்துள்ளனர், 53,70,129 பேர் தொடர்ந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் அமெரிக்காவிற்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. 
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39,036 பேர் அதிகரித்து மொத்தம் 63,14,740 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 444 அதிகரித்து மொத்தம் 1,37,177 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 88,46,313 பேர் குணம் அடைந்துள்ளனர்
 

;