பாலஸ்தீன மக்களுடன் உறுதியாக நிற்க நம் முயற்சிகளை இரட்டிப்பாக்கிட வேண்டும்
காசா ஒரு திடீர் திருப்பத்தில் உள்ளது. பாலஸ்தீன மக் களை நடுங்க வைக்கும் இன வெறி வன்முறை மற்றும் அழிவின் இடை விடாத பிரச்சாரத்தை நடத்தும் ஒரு இனப்படு கொலை குடியேற்ற அரசை அகற்றுவதற்கு மாற்றும் ஆற்றலுடன் சமமாக சக்தி வாய்ந்த ஒன்றாக மாறியிருக்கிறது. வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜப் (Voice of Hind Rajab) என்னும் திரைப்படத்தின் முதல் காட்சி வெனிஸ் திரைப் படவிழாவில் காட்டப்பட்டபோது, அதைப்பார்த்த வர்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் இருபத்தி மூன்று நிமிடங்கள் எழுந்து நின்று கைதட்டியதை விட இந்த தருணத்தை வேறு எதுவும் அடிக்கோடிட்டுக் காட்டமுடியாது. 300 தோட்டாக்களால்... துனிசிய இயக்குனர் கவுதர் பென் ஹனி யாவின் இந்த ஆவணப்படம், 2024 ஜனவரி யில் காசா நகரில் இஸ்ரேலியப் படைகளால் தங்கள் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போது, ஆறு வயது ஹிந்த் ரஜப், அவரது உற வினர்கள், அத்தை, மாமா மற்றும் இரண்டு துணை மருத்துவர்களுடன் கொல்லப்பட்ட கதையைச் சொல்கிறது. இந்த உணர்ச்சிகர மான ஆவணப்படம் பாலஸ்தீன ரெட் கிர சண்ட் சொசைட்டியின் பதிவுகளை அடிப்படை யாகக் கொண்டது. ஹிந்த் தனது குடும்ப உறுப்பினர்களின் உடல்களுக்கு அருகில் காரில் சிக்கிக் கொண்டிருந்தபோது மணிக்கணக்கில் தன்னைக்காப்பாற்றக்கோரி கூப்பாடு போட்டுக்கொண்டிருந்தார். 2024 ஜனவரி 29 அன்று வெளியிடப்பட்ட அந்தப்படம், ஹிந்த், “காப்பாத்துங்க! காப்பாத் துங்க! எனக்கு பயமாக இருக்கிறது” என்று மீட்புப் பணியாளர்களிடம் அழுது கெஞ்சுவ தைக் காட்டுகிறது. அதே நேரத்தில் பின்னணி யில் துப்பாக்கிச் சத்தம் கேட்கிறது. ஒரு ஆம்பு லன்ஸ் அவளை அடையும் முன், அதுவும் இஸ் ரேலிய டாங்கிகளால் அவள் நிற்கும் இடத்திற்கு மிக அருகில் அழிக்கப்பட்டது. ஹிந்தின் குடும்ப கார் 300க்கும் மேற்பட்ட தோட்டாக்களால் சுடப்பட்டது. இரண்டு வாரங்களுக்குப் பிறகு தான் ஆம்புலன்ஸ் மீட்கப்பட்டது. கண்களின் முன்பே களவாடப்பட்டது திரைப்படக் குழுவில் இடம்பெற்றுள்ள நடிகை சஜா கிலானி, பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: “வெகுஜனக் கொலைகள், பட்டினி, மனிதாபிமானமற்ற தன்மை, அழிவு மற்றும் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு போதும்.” அவர் மேலும் கூறினார்: “இந்தப் படம் ஒரு கருத்து அல்லது கற்பனை அல்ல. இது உண் மையில் வேரூன்றியுள்ளது. ஹிந்தின் கதை ஒரு முழு மக்களின் சுமையைச் சுமக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் காசாவில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான குழந் தைகளில் அவரது குரலும் ஒன்று. அது வாழ, கனவு காண, கண்ணியமாக இருக்க உரிமை உள்ள ஒவ்வொரு மகள் மற்றும் ஒவ்வொரு மகனின் குரலாகும். ஆனாலும் இவை அனை த்தும் நம் கண் இமைக்காமல் இருந்த கண்க ளின் முன்பே களவாடப்பட்டன.” குறிப்பாக, பிரபல ஹாலிவுட் பிரபலங்கள் படத்துடன் தொடர்புடையவர்கள், கூறும் விமர்ச னங்கள் மாறிவரும் இரக்கத்தையும் பொது மக்களின் பார்வையையும் பிரதிபலித்தன. விமர்சகர்கள் தங்கள் பாராட்டில் தளர்வில்லா மல் இருந்தனர். தி கார்டியன் இதழ், “பொறுப் பற்ற, இரக்கமற்ற... ஒரு ஆத்திரமூட்டும் புத்திசா லித்தனம். எந்தப் படம் வெனிஸை எரிய வைத்தது என்பதில் சந்தேகமில்லை” என்று குறிப்பிட்டது: வோக் இதழ் இதை “ஒரு மனித நேய அற்புதம், விழாவின் மிக உயர்ந்த பாராட்டு க்கு தகுதியானது” என்று குறிப்பிட்டது. இந்தப் படம் இறுதியில் வெள்ளி சிங்கம் (Silver Lion) விருதினைப் பெற்றது என்பது அதன் சாதனை யின் மிகச்சிறிய பகுதியாகும். சுமுத் புளோட்டிலா: நான்காவது முயற்சி இந்த தருணம் நிகழக் காத்திருந்தது. காசா மீது காற்றில் ஏற்படும் மாற்றத்தின் மற்றொரு அறிகுறி, முற்றுகையை உடைக்க இதுவரை எடுக்கப்பட்ட மிகப்பெரிய முயற்சி: சுமுத் புளோ ட்டிலா(Sumud Flotilla). காசா கடல் முற்று கையை முறியடித்திட இந்த ஆண்டு மேற்கொள் ளப்பட்டுள்ள நான்காவது முயற்சி இதுவா கும். பார்சிலோனா, துனிஸ், மலேசியா, ஜெனோ வா, கட்டானியா மற்றும் சிரோஸ் உட்பட 44 நாடுகளைச் சேர்ந்த ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற ஐம்பது கப்பல்கள், உணவு, தண்ணீர் மற்றும் மருந்துகளுடன் புறப்பட்டுச் சென்றுள் ளன. செப்டம்பர் நடுப்பகுதியில் அவற்றின் வருகை எதிர்பார்க்கப்படுகிறது. இது வளர்ந்து வரும் ஒற்றுமையின் வெளிப்பாடாகும். குறிப் பிடத்தக்க வகையில், புளோட்டிலா தடுக்கப் பட்டால் ஐரோப்பா முழுவதும் கடல்சார் நடவடிக் கைகளை நிறுத்துவோம் என்று துறைமுகத் தொழிலாளர் சங்கங்கள் எச்சரித்துள்ளன. பாலஸ்தீனம் இறந்தால் மனிதகுலம் இறந்துவிடும் கொலம்பியாவின் ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ, புளோட்டிலாவிற்கு அளித்த செய்தி யில் இந்த ஒற்றுமையின் சாரத்தை வெளிப் படுத்தினார்: “பாலஸ்தீனம் இறந்தால், மனித குலம் அனைத்தும் அதனுடன் இறந்துவிடும். நீங்கள் மேற்கொள்வது வெறும் கடல் பய ணம் மட்டுமல்ல; அது ஒரு நெறிமுறை கூக் குரல் (ethical cry). வரலாற்றின் சக்தியுடன் காற்று உங்கள் படகுகளை சுமந்து செல்லட் டும். கடல் அதன் கரங்களைத் திறக்கட்டும். உலகம் உங்கள் செய்தியைக் கேட்கட்டும். நீங்கள் காசா அருகே சென்றடையும் போது, உங்கள் அருகில் பயணம் செய்வது அமைதி என்பது ஒரு கற்பனாவாதம் அல்ல, ஆனால் ஒரு கடமை என்று நம்பும் பல லட்சக்கணக்கான வர்களின் குரல் என்பதை நீங்கள் உணரு வீர்கள்.” இத்தகைய ஆர்வமும் ஒற்றுமையும் திடீ ரென எழுந்ததல்ல. 63,000க்கும் மேற்பட் டோர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் குறைந்தது 332 பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறந்த னர். அவர்களில் 124 பேர் குழந்தைகள். 240க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு முற்றுப்புள்ளி எப்போது வைக்கப்போகிறோம்? பாலஸ்தீன பிரதேசங்களை வரைபடத்திலி ருந்து கிட்டத்தட்ட அழிக்கும் நோக்கில், சியோ னிச அரசின் பேரழிவு பிரச்சாரம் தொடங்கியதிலி ருந்து, கடந்த இரண்டு ஆண்டுகளில், உல கெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கினர். இனப்படுகொலைகள் அவர்களின் வீடுகளுக்குள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. மனிதாபிமான உதவிகளைத் தடுப்பதன் மூலமும், மருத்துவமனைகள் மீது குண்டுவீசுவதன் மூலமும், உணவு விநியோ கத்திற்காக வரிசையில் நிற்கும் பொதுமக்களை சுட்டுக்கொல்வதன் மூலமும் பாலஸ்தீனர்க ளை பட்டினி போடும் இஸ்ரேலின் படங்கள் பார்க்கும் அனைவரின் கண்டனத்திற்கும் உள்ளாயின. திருப்புமுனையாக... இந்த நிகழ்ச்சிப்போக்குகள், டெல் அவிவில் குடியேறி-காலனித்துவ அரசாங்கத்திற்கு எதி ரான வளர்ந்து வரும் உலகளாவிய பிரச்சாரத் துடன் இணைந்து, ஒரு காலத்தில் இஸ்ரேலுடன் பக்கபலமாக இருந்த அரசாங்கங்களின் பதில் களையும் இப்போது வடிவமைக்கின்றன. நேதன்யாகுவின் அரசாங்கம் அதிகரித்து வரும் இராஜதந்திர தனிமைப்படுத்தலை எதிர் கொள்கிறது. பாலஸ்தீனம் மற்றும் காசா ஆகி யவை ஐரோப்பாவில் மட்டுமல்ல, அமெரிக்கா விற்குள்ளும் கூட முக்கிய பிரச்சனைகளாக மாறிவிட்டன. இதனால்தான் செப்டம்பர் மாதம் ஒரு முக்கியமான திருப்புமுனையாக மாறியுள்ளது. ஐக்கிய நாடுகள் மன்றத்தின் விதிகளின் கீழ், ஒரு நிரந்தர உறுப்பினரின் வீட்டோ அதிகாரத்தால் பாதுகாப்பு கவுன்சில் தடுக்கப்படும்போது, அமைதிக்கான ஐக்கிய வழிமுறை ஐ.நா பொது மன்றம் செயல்பட அதிகாரம் அளிக்கிறது. இந்த வழிமுறையின் மூலம், பொதுமக்களைப் பாதுகாக்க, மனிதாபிமான உதவியை உறுதி செய்ய, போர்க்குற்றங்களுக்கான ஆதாரங்க ளைப் பாதுகாக்க மற்றும் மீட்பு மற்றும் மறு கட்டமைப்பை ஆதரிக்க பாலஸ்தீனத்திற்கு ஐ.நா பாதுகாப்புப் படையை அனுப்ப ஐ.நா. பொதுமன்றம் கட்டாயப்படுத்த முடியும். சர்வதேச நீதிமன்றத்தின் (ICJ- Inter national Court of Justice) உத்தரவுகள் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு இஸ்ரேல் இணங்கு வதற்காக கடந்த ஆண்டு ஐ.நா. பொது மன்றத் தால் நிர்ணயிக்கப்பட்ட வரவிருக்கும் காலக் கெடு - இணங்காத பட்சத்தில் “மேலும் நடவ டிக்கைகள்” எடுப்பதாக உறுதியளித்தது - நடவ டிக்கைக்கான ஒரு முக்கியமான தருணத்தைக் குறிக்கிறது. உண்மையில், தலையிடுவ தற்கான நேரம் நீண்ட காலமாகிவிட்டது. 12 தடைகள் விதிக்க பெல்ஜியம் திட்டம் இந்த சூழலில், பிரான்ஸ், பிரிட்டன், கனடா மற்றும் ஆஸ்திரேலியாவுடன் சேர்ந்து இந்த மாதம் ஐ.நா.பொது மன்றத்தில் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக பெல்ஜியம் அறி வித்துள்ளது. மேற்குக் கரையில் உள்ள சட்ட விரோத குடியேற்றங்களிலிருந்து வரும் அனைத்து தயாரிப்புகளுக்கும் தடை மற்றும் இஸ்ரேலிய நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட பொது கொள்முதல் கொள்கைகளை மறுஆய்வு செய் வது உட்பட இஸ்ரேல் மீது பன்னிரண்டு தடை களை விதிக்கவும் பெல்ஜியம் திட்டமிட்டுள்ளது. ஆக்கிரமிப்பு குடியேற்றம் சட்டவிரோதம் என்றது சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேலிய ஆட்சியால் நிகழ்த்தப்படும் இனப்படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்களைத் தடுக்க - ஜெனீவா உடன்படிக்கைகள், இனப்படு கொலை மாநாடு மற்றும் சர்வதேச சட்டத்தின் பிற ஆதாரங்களின் கீழ் - நாடுகள் சட்டப் பூர்வமாக செயல்பட கடமைப்பட்டுள்ளன. பாலஸ்தீன அரசு முறையாக தலையீட்டை அழைத்துள்ளது. மேலும் பாலஸ்தீன சிவில் சமூகம் பலமுறை மேல்முறையீடுகளை வெளி யிட்டுள்ளது. 1967 முதல் பாலஸ்தீன பிரதே சங்களை இஸ்ரேல் ஆக்கிரமித்து குடியேற் றங்களை நிறுவுவது சட்டவிரோதமானது என்று சர்வதேச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்ப ளித்துள்ளது, மேலும் காசாவில் இனப்படு கொலைக்கான ஒரு சாத்தியமான அபாயத் தைக் கண்டறிந்துள்ளது. இந்த தீர்ப்புகள் அனைத்தும் சர்வதேச தலையீட்டை சட்டப்பூர்வ மாக்குவது மட்டுமல்லாமல், கட்டாயத் தேவை யாகவும் ஆக்குகின்றன. இந்த மாத ஐ.நா.பொதுமன்ற அமர்வின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, பாலஸ்தீன அரசாங்கத்திற்கு கலந்துகொள்ள அனுமதி மறுக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் முடிவு அப்பட்டமாகவும் அவநம்பிக்கையாகவும் தெரிகிறது. அமெரிக்கப் பேரரசின் செல்வாக்கு குறைந்து வரும் நிலையில் - குறிப்பாக சமீபத்திய ‘பிரிக்ஸ்’ மற்றும் ‘ஷங்காய் ஒத்து ழைப்பு ஸ்தாபனம்’ உச்சிமாநாடுகளின் வெளிச்சத்தில் - இத்தகைய சூழ்ச்சிகள் இஸ் ரேல் மற்றும் அமெரிக்கா இரண்டின் நம்ப கத்தன்மையையும் மேலும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும். “ஜனநாயகத்தின் சாம்பியன்கள்” என்ற அவர்களின் சுயமாக அறிவிக்கப்பட்ட பங்கு உலகளாவிய தாக்குதலாக மாறும் அபாயம் உள்ளது. இஸ்ரேல் அமைச்சரை வரவேற்பது உலகளாவிய பொதுக் கருத்துக்கு எதிரானது இதற்கிடையில், தீவிர வலதுசாரி இஸ்ரே லிய நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச், ஏற்கனவே பல மேற்கத்திய அரசாங்கங்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கடுமை யான அறிக்கைகளுக்காக தடைகள் மற்றும் கண்டனங்களை எதிர்கொண்டுள்ளார். இரு தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா வந்துள்ளார். ஸ்மோட்ரிச் சமீபத்தில் மேற்குக் கரையில் சர்ச்சைக்குரிய குடியேற்றத் திட்டத்தை மீண்டும் உயிர்ப்பித்துள்ளார். இது பாலஸ்தீன அரசின் சாத்தியத்தை நிரந்தரமாக அழிக்கும் என்று விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர். இந்த மாத தொடக்கத்தில், மேற்குக் கரையின் 82 சதவீதத்தை இணைப்பதற்கான வரைபடங்கள் வரையப்பட்டு வருவதாகவும், பாலஸ்தீன மக்கள்தொகை மையங்கள் சிதறடிக்கப்படுவ தாகவும் அவர் அறிவித்துள்ளார். பண யக்கைதிகளை விடுவிப்பதற்காக பட்டினியால் வாடும் காசாவின் மக்கள்தொகையை நியா யப்படுத்தலாம் என்றும் அவர் பரிந்துரைத்துள் ளார். இதனை, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கி லாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகி யவை “பயங்கரமானவை” என்று கண்டனம் செய்தன. பாலஸ்தீனம் குறித்த தியான்ஜின் தீர்மா னத்தை இந்தியா ஆதரித்த போதிலும், இந்த சூழலில் ஸ்மோட்ரிச்சை வரவேற்பது உலகளா விய பொதுக் கருத்துக்கு எதிரானது. இஸ்ரே லுடனான இராணுவ மற்றும் பாதுகாப்பு உற வுகளை முடிவுக்குக் கொண்டுவரவும், இனப்படு கொலையை எதிர்கொள்ளும் பாலஸ்தீன மக்களுடன் உறுதியாக ஒற்றுமையாக நிற்க வும் இந்திய மக்கள் தங்கள் முயற்சிகளை இரட்டிப்பாக்கிட வேண்டும். “யுத்தம் இனி ஒருபோதும் கூடாது” என்பதை வலியுறுத்த வேண்டிய நேரம் இதுவாகும். (செப்டம்பர் 9, 2025), தமிழில் : ச.வீரமணி