ஆப்கனில் குடிநீர் தட்டுப்பாடு : தண்ணீருக்காக வாடும் குழந்தைகள்
காலநிலை மாற்றம், வறட்சி, சீரற்ற மழைப்பொழிவு ஆகியவை அதிகரித்து வருவதன் தாக்கத்தால் ஆப்கானிஸ்தானில் குடிநீர் பற்றாக்குறை தீவிரமடைந்துள்ளது. ஆசியாவிலேயே தண்ணீர்ப் பஞ்சம் மிகுந்த நகரங்களில் ஒன்றாக அந்நாட்டு தலைநகர் காபூல் இருப்பதாக சர்வதேச அமைப்புகள் தெரிவித்துள்ளன. பஞ்சத்தின் தாக்கத்தின் காரணமாக குழந்தைகள் பள்ளி செல்வதற்கு பதிலாக காலிப் பாத்திரங்களுடன் தண்ணீர் பிடிப்பதற்காக வரிசையில் வாடும் சூழல் உருவாகியுள்ளது.
ஈரான் மீதான தடைகள் : பேச்சுவார்த்தையை முடக்கக் கூடாது
ஈரான் மீது மீண்டும் தடைகள் விதிப்பது அந்நாட்டுடனான ‘பேச்சுவார்த்தைக்கு முடிவு கட்டுவதாக இருக்கக் கூடாது’ என ஐரோப்பிய ஒன்றிய தூதர் ஒருவர் தெரிவித்துள் ளார். ஈரான் அரசு அந்நாட்டின் அணுசக்தி ஆற்றலை மேம்படுத்தும் பணியை தொடரும் நிலையில் அதற்கெதிராக மீண்டும் தடைகளை விதிப்பதற்கான நடைமுறைகளை ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலை யில் தான் ஈரான் உடனான ராஜிய ரீதியிலான உறவுக்கு முடிவு கட்டும் வகையில் தடை கூடாது என கூறப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ், வியட்நாமில் புயல் : 20க்கும் மேற்பட்டோர் பலி
வியட்நாம், பிலிப்பைன்ஸ் ஆகிய இரு நாடுகளிலும் “புவாலாய்” புயல் தாக்குதலில் 20 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிலிப்பைன்ஸில் தோன்றிய இந்த புயல் காரணமாக சுமார் 4,00,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். இந்த புயல் தாக்குதலில் பிலிப்பைன்ஸில் மட்டும் 24 பேர் பலியாகியுள்ளனர். இப்புயல் வியட்நாமில் கரையை கடந்த போது அந்நாட்டில் 11 பேர் பலியாகியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு
அமெரிக்காவில் உள்ள துப்பாக்கிக் கலாச்சாரத்தின் காரணமாக ஒவ்வொரு நாளும் பல அப்பாவிகள் கொல்லப்பட்டு வருகிறார்கள். தற்போது தாமஸ் ஜாக்கப் சன்போர்டு என்பவர் தேவாலயம் ஒன்றில் பிரார்த்தனையில் இருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 4 பேர் பலியாகியுள்ளனர். 9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவலர்கள் அந்த நபரை சுட்டுக் கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் இனப்படுகொலை எண்ணிக்கை 66,000-ஐ கடந்தது
இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 66 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இஸ்ரேல் ராணுவம் காசா நகருடன் முழு காசாவையும் கைப்பற்றும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதற்காக தரை மற்றும் வான் வழியாக பாலஸ்தீனர்கள் மீது கொடூரமாக குண்டு வீசி தாக்குதல் நடத்தி அவர்களை வெளியேற்றி வருகிறது. இதில் படுகொலையான பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 66,005 ஐ கடந்துள்ளது. செப்.29 அன்று மட்டும் 50 பேர் இஸ்ரேல் ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
துருக்கியின் நலன்களுக்கு அமெரிக்காவிடம் பிச்சை எடுக்க வேண்டியதில்லை : துருக்கி கம்யூனிஸ்ட் கட்சி காட்டம்
அங்காரா,செப். 29- துருக்கிக்கு நலன்கள் வேண்டும் என அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வாசலில் பிச்சை எடுக்க வேண்டியதில்லை என துருக்கி ஜனாதிபதியை அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சி கடும் காட்டமாக விமர்சித்துள்ளது. துருக்கி ஜனாதிபதி எர்டோகன் அமெரிக்காவில் டிரம்ப்பைச் சந்தித்தார். இந்த சந்திப்பில் துருக்கி க்கு போர் விமானங்களை விற்பனை செய்வதற் காக இரு நாட்டு தலைவர்களும் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதற்காக துருக்கி சுமார் 8 லட் சத்து 87 ஆயிரம் கோடிக்கும் (100 பில்லியன் டால ருக்கும்) அதிகமாக செலவு செய்ய வேண்டிய சூழல் வரும். இந்தச் சுமை அனைத்தும் நம் நாட்டின் உழை க்கும் மக்களின் மீது தான் சுமத்தப்படும். இத னால் எர்டோகன்-டிரம்ப் சந்திப்பானது துருக்கி மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற் கான நடவடிக்கை அல்ல. இது ஒரு நாடு படுகுழி யின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டு, மூலையில் அடைக்கப்பட்டிருப்பதைக் காட்டுகிற சந்திப்பு என துருக்கி கம்யூனிஸ்ட் கட்சி தனது அறிக்கையில் கண்டித்துள்ளது. மேலும் தனது அறிக்கையில், நமது நாட்டின் கனிமங்கள், எண்ணெய் வளங்க ளின் எதிர்காலப் பயன்பாடு, நமது நாட்டிற்கான வளர்ச்சித்திட்டம், ஏன், நமது எதிர்காலமே கூட டிரம்பின் வாயிலிருந்து விழும் வார்த்தைகளை மட்டுமே சார்ந்திருக்கிறது என்று கூறுவது ஏற்றுக் கொள்ளவே முடியாத ஒன்று. எர்டோகனின் இந்த அமெரிக்க பயணம் துருக்கியை நெருக்கடியிலிருந்து மீட்கும் என்று சொல்லப்பட்டதில் எந்த உண்மையும் இல்லை. இதனால் ஏற்படப்போகும் விளைவு ஏற்கெனவே எழுதப்பட்டு விட்டது. எர்டோகன் கொடுப்பார், டிரம்ப் எடுத்துக்கொள்வார். எர்டோகனின் நீதி மற்றும் மேம்பாட்டுக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஒரே ஒரு திட்டத் திற்காக மட்டுமே அமெரிக்கா சென்றது. அமெ ரிக்காவிடம் சரணடைவது தான் அந்தத் திட்டம். நமது வளங்களையும், நமது மக்களின் வரிப் பணத்தையும் கொள்ளையடிப்பதற்காக அமெ ரிக்காவுக்கு திறந்துவிடப்படுகின்றது. நமது நாட்டைப் படுகுழியின் விளிம்பிற்குக் கொண்டு செல்பவர்களையும், வெள்ளை மாளி கையின் வாசலில் போய் சட்டப்பூர்வ அங்கீகா ரத்தைத் தேடுபவர்களையும் நாம் கவனித்துக் கொண்டிருக்கிறோம் என துருக்கி கம்யூனிஸ்ட் கட்சி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. நேட்டோ நாடுகள் தங்கள் ராணுவ பலத்தை அதி கரிக்க அந்நாடுகளின் ஜிடிபியில் 5 சதவீதம் வரை செலவு செய்ய வேண்டும் எனவும் உக்ரைனுக்கு ஆயுதம் வழங்க அமெரிக்காவிடம் ஆயுதம் கொள் முதல் செய்ய வேண்டும் எனவும் டிரம்ப் உத்தர விட்டுள்ளார். இந்நிலையில் நேட்டோ ராணுவ கூட்ட மைப்பில் உறுப்பினராக உள்ள துருக்கியும் அமெரிக்காவிடம் ஆயுதக் கொள்முதலை அதி கரிக்க துவங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
