அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில், ஆளுங்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிஸ் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கமலா ஹாரிஸின் தாயார் ஷியாமலா கோபாலன் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர் என்பதும், தந்தையார் டொனால்டு ஜேஸ்பர் ஹாரிஸ் ஆப்பிரிக்க தேசமான ஜமைக்காவை பூர்வீகமாக கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்ததை தொடர்ந்து, ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அந்நாட்டின் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் முன்னிறுத்தப்பட்டார்.
இதைத்தொடர்ந்து திங்கள்கிழமை இரவு நடைபெற்ற வாக்கெடுப்பில், ஆளும் ஜனநாயக கட்சிப் பிரதிநிதிகள் 99 சதவிகிதத்தினரின் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இந்த வாக்கெடுப்பில் நாடு முழுவதுமிருந்து ஜனநாயக கட்சிப் பிரதிநிதிகள் சுமார் 4,567 பேர் பங்கேற்றனர்.
அடுத்தகட்டமாக துணை ஜனாதிபதி வேட்பாளர் யார்? என்பதை கமலா ஹாரிஸ் விரைவில் அறிவிக்கவுள்ளார்.