world

img

தீக்கதிர் உலக செய்திகள்

பிரிட்டனில் வேலையின்மை  அதிகரிப்பு

பிரிட்டனில் கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அள விற்கு வேலையின்மை விகிதம் 4.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. அந் நாட்டின் தேசிய புள்ளி விவர அலுவலகத்தின் புள்ளிவிவரங்கள்படி மே-ஜூலை காலா ண்டில் காலிப் பணியி டங்களின் எண்ணிக்கை  7,18,000 ஆக உள்ளது. அதே போல அந் நாட்டின் முக்கியமான 18 துறைகளில் உள்ள 16 துறைகளில் முந்தைய காலாண்டை விட 17.6 சதவீதம் புதிய வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளன.

ஏமன் குழந்தைகள் மோசமான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிப்பு 

ஏமனில் உள்ள குழந்தைகளின் மோசமான ஊட்டச் சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டு வருவதாக ஐ.நா அவை எச்சரித்துள்ளது. அந்நாட்டின் 5 வய துக்குட்பட்ட குழந் தைகளில் 50 சத வீதத்துக்கும் அதிக மானவர்கள் கடுமை யான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள் ளனர். மேலும் கிட்ட த்தட்ட பாதிப் பேர் வளர்ச்சிக் குறைபாடிடட்டால் பாதிக்கப்பட்டுள்ள னர். எனவே அவசர காலஅடிப்படையில் ஊட்டச்சத்துக் கான உணவுவிநியோகத்தை ஏமனில் அதிகரிக்க வேண்டும் என ஐநா அழைப்பு விடுத்துள்ளது.

நேர்மையான ஒப்பந்தம் பெற அமெரிக்காவுடன் வர்த்தகப் பேச்சு

வியட்நாமும் பலன் பெறும் வகையில் நேர்மை யான, விரிவான, சீரான மற்றும் நிலையான வர்த் தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்காக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை களைத் தொடர அந் நாட்டு பிரதமர் பாம் மின் சின் அறி வுறுத்தியுள்ளார்.ஆகஸ்ட் 1 முதல், 69 வர்த்தகக் கூட்டா ளிகள் மீதான வரி விகிதங்களை மாற்றியமைத்த டிரம்ப் வியட்நாம் பொருட்களின் மீதான  வரிகளை 46 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாகக் குறைத்துள்ளார். 

ஐரோப்பா, உக்ரைனுடன்  டிரம்ப் பேச்சு 

புடினுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னதாக டிரம்ப் ஐரோப்பா, உக்ரைன் தலை வர்களுடன் காணொலி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள் ளது. டிரம்ப் ஜனாதி பதியாக பொறுப் பேற்ற பிறகு உக் ரைன்-ரஷ்யா போர் நிறுத்த பேச்சுவார்த் தையில் உக்ரைனை யும் ஐரோப்பிய நாடு களின் தலைவர்களையும் இணைக்காமல் தவிர்த்து வந்தார். இந்நிலையில் உக்ரைன் இல்லாமல் பேச்சு வார்த்தை இல்லை என ஜெலன்ஸ்கி எதிர்ப்பு தெரிவித்த பிறகு இந்நகர்வை டிரம்ப் முன்னெடுத்துள்ளார். 

அகண்ட இஸ்ரேல் அமைக்கப்போவதாக நேதன்யாகு அறிவிப்பு 

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தான் ஒரு வரலாற்றுப் பணியில் இருப்பதாகவும், “அகண்ட இஸ்ரேல்” என்ற தொலைநோக்குப் பார்வையை வலுவாக ஆதரிப்ப தாகவும் தெரிவித் துள்ளார். இதன்  மூலம் அவர் அக ண்ட இஸ்ரேலை அமைக்கும் பணி யில் இருப்பதை உறுதி செய்துள் ளார். காசா, மேற்கு கரை மட்டுமின்றி சிரியாவின் பகுதிகளையும் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து ஆக்கிரமித்து வருகிறது. இந்நிலை யில் ஜோர்டான், லெபனான், எகிப்தின் சில பகுதிகள்மீது மீண்டும் ஆக்கிரமிப்பு தொடரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.