world

img

தீக்கதிர் உலக செய்திகள்

ஹவுதிகளின் தாக்குதலுக்கு  ஐ.நா. பொதுச்செயலாளர் கண்டனம்  

இஸ்ரேலின் இனப்படுகொலை தாக்குதலுக்கு ஆதரவான நாடுகள் மற்றும் நிறுவனங்களின் கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பு தாக்குதலை துவங்கியுள்ளது. சமீபத்தில் இரண்டு வணிகக் கப்பல்களை தாக்கி மூழ்கடித்துள்ளது. அதில் நான்கு பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காணாமல் போயுள்ளனர். இந்நிலையில் ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோணியோ குட்டரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார் என அவரது செய்தித் தொடர்பாளர் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.

அரசு ஊழியர்களை பணி  நீக்கம் செய்யும் டிரம்ப்

1,300 அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்ய டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அரசின் செலவுகளை குறைப்பது என்ற பெயரில் பல முக்கியத் துறைகளுக்கு நிதிகளை வெட்டுவது, அரசு பணியாளர்களை பணி நீக்கம் செய்வது ஆகியவற்றை டிரம்ப் வலுக்கட்டாயமாக செய்து வருகிறார். இதன்படி அமெரிக்காவிற்குள் பணியாற்றும் 1,107 பணியாளர்கள், வெளி நாடுகளில் பணிகளை மேற்கொண்டு வரும் 246 பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர்.  

ஐரோப்பாவில் வெப்ப அலை  2,300 பேர் பலி

காலநிலை மாற்றத்தால் ஐரோப்பிய நாடுகளில் மிக மோசமான வெப்ப அலை வீசி வருகிறது. இந்நிலையில் பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல், ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளில் கடந்த 10 நாட்களில் மட்டும் 2,300 பேர் வெப்ப அலையின் தாக்கத்தால் உயிரிழந் துள்ளனர். வெப்ப அலை தீவிரமாக இருக்கும் மதிய நேரங்களில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் நலனுக்காக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதுடன் அலுவலகங்கள், வணிக வளாகங்கள் பகுதி நேரம் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன. 

புளூ டிக் கட்டணத்தை குறைத்தது டிவிட்டர் நிறுவனம்

டிவிட்டர் நிறுவனத்தை மஸ்க் வாங்கிய பிறகு ‘புளூ டிக்’ பெறுவதற்கு ஏற்கனவே இருந்த நடைமுறையை மாற்றி மாதம் தோறும் 900 ரூபாய் சந்தா கட்டினால் யார் வேண்டுமானாலும் புளூ டிக் பெறலாம் என்ற நிலையை கொண்டு வந்தார். தற்போது டிவிட்டர் (எக்ஸ்) தள பயனர்கள் தங்கள் கணக்கிற்கு ‘புளூ டிக்’ பெறுவதற்கான சந்தா கட்டணத்தை குறைத்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள் ளது. ஒரு மாதத்துக்கான சந்தா கட்டணம் 470 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது.  

போர் நிறுத்த பேச்சுவார்த்தை  இஸ்ரேல் அத்துமீறலால் தாமதம் 

காசாவில் போர் நிறுத்தம் ஏற்படுத்து வதற்கான ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையேயான பேச்சுவார்த்தைகள், இஸ்ரேலின் அத்துமீறல் நடவடிக்கைகளின் காரணமாக தாமதமாகி வருகிறது. இஸ்ரேலின் ராணுவம் காசா பகுதிக்குள் முகாமிட்டு  ஆக்கிரமித்துள்ளதால் தான் பேச்சுவார்த்தை தாமதமாகிறது என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பு போர் நிறுத்தத்திற்கு முன்னுரிமை கொடுத்தாலும்  இஸ்ரேல் அதனை மீறி போர் நிறுத்தம் ஏற்படாமல் செய்து விடுகிறது. 

ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் வடகொரியா பயணம்

பியாங்யாங், ஜூலை 12-  ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மூன்று நாள் அரசு முறை பய ணமாக வடகொரியா சென்றுள்ளார்.  ஜூலை 11 முதல் 13 வரை அந்நாட்டின் வெளி யுறவுத்துறை துறை அமைச்சர் சோய் சோன்-ஹுய் உள்ளிட்ட முக்கியத்துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.  ரஷ்ய ஜனாதிபதி புடின் கடந்த ஆண்டு வட கொரியாவிற்கு அரசு முறை பயணமாக சென்ற போது இரு நாடுகளுக்கும் இடையே மிக முக்கிய மான பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒரு நாடு மற்றொரு நாட்டிற்கு ஆதரவாக போரில் ஈடுபடும் வகையில் அந்த ஒப்பந்தம் மேற்கொள் ளப்பட்டுள்ளது. அதாவது ஒப்பந்தத்தின்படி இந்த இரு நாட்டின் எல்லைக்குள் வேறு ஒரு நாடு தாக்கு தல் நடத்தினால் ஒரு நாடு மற்றொரு நாட்டிற்கு நேரடியான அனைத்து வகையான ராணுவ உத விகளையும் செய்வது என்பதே அந்த ஒப்பந்தத் தின் மிக முக்கியமான சாராம்சமாகும். இந்த ஒப்பந் தத்தில் புடினும் கிம் ஜாங் உன்னும் கையெழுத் திட்டுள்ளனர்.  இதன்படி உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு ஆதரவாக போரிட தனது நாட்டு ராணுவ வீரர்க ளை வடகொரியா அனுப்பி இருந்தது. இதனை ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர்களே சில நாட்களுக்கு முன்பு உறுதிப்படுத்தி உள்ளனர். தற்போது போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு உடன்படாமல் இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் உக்ரைன் ரஷ்யாவுடன் போரிட்டு வருகிறது. தாக்குதலையும் தீவிரப் படுத்தியுள்ளது.  ரஷ்யாவும் தாக்குதலை தீவிரப்படுத்தி வரு கிறது. போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருந்தாலும் எங்களது இலக்கை உறுதியாக அடைவோம் என்றும் அந்நாடு   தெரிவித்துள்ளது.  இந்நிலையில் மலேசியாவில் நடைபெற்ற ஆசியான் மாநாட்டில் அமெரிக்க வெளியுற வுத்துறை செயலாளர் மார்க்கோ ரூபியோ மற்றும் செர்ஜி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை குறித்த முழு விவரங்களும் வெளி வரவில்லை. எனினும்  செய்தியாளர்கள் சந்திப் பின் போது, செர்ஜியுடன் போர் நிறுத்த முயற்சிக ளை மீண்டும் துவங்குவதற்கான “புதிய மற்றும் மாறுபட்ட அணுகுமுறை” குறித்து இரு தரப்பின ரும் விவாதித்ததாக தெரிவித்தார். செர்ஜியும் அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.  ரூபியோ கலந்து கொண்டதால் வடகொரியா இம்மாநாட்டில் கலந்துகொள்வதை தவிர்த்தது.   சமீபத்தில்  உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை அமெரிக்கா மீண்டும் அதிகரித்துள்ளது. டிரம்ப் பின் அறிவிப்பு வெளியான உடன் உக்ரைன் மீது சுமார் 800க்கும் மேற்பட்ட டிரோன்கள் மற்றும் ஏவு கணைகளை வீசி ரஷ்யா மிகப் பெரும் தாக்குதலை நடத்தியது. அதனைத் தொடர்ந்து ஜூலை 14 அன்று ரஷ்யா தொடர்பான மிக முக்கியமான அறிவிப்பை வெளியிடப் போவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இந்தப் பின்னணியில் ரஷ்ய வெளியுற வுத்துறை அமைச்சர் செர்ஜி, வடகொரியாவிற்கு சென்றுள்ளார். இந்த பயணத்தில் ராணுவ ஒத்துழைப்பு குறித்தான பேச்சுவார்த்தை முக்கிய இடம் வகிக்கும் என கூறப்படுகிறது.