உக்ரைன்-ரஷ்யா இடையேயான போரை முடிவுக்குக் கொண்டு வர அலாஸ்காவில் மாகாணத்தில் நடைபெற்ற டிரம்ப்- ரஷ்ய ஜனாதிபதி புதின் இடையே நடைபெற்ற 3 மணி நேர பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.
உக்ரைன்-ரஷ்யா இடையே தொடர்ந்து போர் நீடித்து வரும் நிலையில், போர் நிறுத்தம் தொடர்பாக இன்று அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் டிரம்ப்- புதின் இடையே 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையின் போது உகரைன்- ரஷ்யா இடையே போர் நிறுத்தத்துக்கான எந்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லை. ஆனால் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக இரு தலைவர்களும் அறிவித்திருக்கிறார்கள். ஆனால் அது பற்றி விளக்கம் கொடுக்கவில்லை. ஒப்பந்தம் ஏற்படவில்லை என்பதை மட்டுமே அறிவித்துள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், ரஷ்ய ஜனாதிபதி புதினும் சந்தித்து பேசிக்கொண்டது மிகப்பெரிய எதிர்பார்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் செய்தியாளர்களிடம் கூட்டாகப் பேசும்போது இரண்டு தலைவர்களும் ஒருவருக்கொருவர் பாராட்டிக் கொண்டார்களே தவிர, விவாதிக்கப்பட்ட விசயங்கள் குறித்து மிக் குறைந்த விவரங்களை மட்டுமே தெரிவித்திருந்தனர்.
இந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை ரஷ்யாவின் மாஸ்கோவில் நடைபெறும் என்று அறிவித்த புதின், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், மாஸ்கோ வர வேண்டுமென்று அழைப்பும் விடுத்தார்.