வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்து பொருட்களுக்கு 100% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், தனது சமூக வலைத்தள பக்கத்தில் விடுத்துள்ள பதிவில், வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்பட்டு அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்து பொருட்களுக்கு 100% வரி விதிக்கப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளார்.
அதே வேளையில், அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் மருந்து நிறுவனங்களுக்கு வரி எதுவும் விதிக்கப்படாது எனவும் இந்த வரி வரும் அக்டோபர் 1ஆம் தேதி அமலுக்கு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சமையலறை உபகரணங்கள் மற்றும் குளியலறை பொருட்களுக்கு 50% வரி, வீடுகளில் பயன்படுத்தப்படும் பல்வேறு விதமான இருக்கை உபகரணங்களுக்கு 30% வரி, கனரக ட்ரக்குகளுக்கு 25% வரி விதிக்கப்படும் என அடுத்தடுத்து இறக்குமதி வரிகளை விதித்துள்ளார்.