இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ பிரிட்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவரைத் தனது இல்லத்தின் வாயிலில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனாக் வரவேற்றார். அந்த வரவேற்பு நடக்கும்போது, பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டுநின்று நேதன்யாஹூவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்கள்.