world

img

சீனாவிடம் தோற்கிறது அமெரிக்கா?

சில குறிப்பிட்ட துறைகளில் அமெரிக்க நிறுவனங் களின் முதலீடுகள் சீனாவுக்குள் நுழையக்கூடாது என்று ஜோ பைடன் நிர்வாகம் தடை களைப் போடவிருக்கிறது. புதிய விதிகள் உருவாக்கப்படு கின்றன. தாராள வர்த்தகம் என்று உபதேசித்த அமெரிக்கா, தன்னை விட முன்னணியில் சீனா வந்து  கொண்டிருப்பதால் முட்டுக்கட்டை போடுவதில் முனைந்து  நிற்கிறது. இதற்காக உருவாக்கப்படும் திட்டத்திற்கு நிதி  கோருகிறார்கள். வரும் நிதிநிலை அறிக்கையில் நிதி  ஒதுக்கீடு செய்யுமாறு ஜோ பைடன் நிர்வாகம் வலியுறுத்தி யுள்ளது.

கான்பெர்ரா, மார்ச் 6- மிகவும் வளர்ந்த தொழில்நுட்ப ஆய்வு மற்றும் மேம்பாட்டில் அமெரிக்காவை சீனா  முந்தியிருப்பதாக ஆஸ்திரேலியாவின் கேந்திரக் கொள்கை மையம் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. உலகம் முழுவதுமிருந்து வல்லுநர்களைத் தன் வசம் ஈர்த்துக் கொள்ளும் அமெரிக்கா, திறமைகளைத் தக்க வைப்பதிலும், முன்னேறிய தொழில்நுட்பங்களை வளர்க்கும் போட்டியிலும் சீனாவிடம் தோற்றுப் போயிருப்பதாக இந்த ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர்கள் தெரி வித்துள்ளனர். இத்தகைய ஆய்வை முதன்முறையாக மேற்கொண்டுள்ள இந்த ஆய்வு மையம், தனது அறிக்கையை பொது வெளியில் வைத்துள்ளது. தொழில்நுட்பங்களை உருவாக்குவதிலும், அவற்றை வளர்த்தெடுப்பதிலும் அமெரிக்கா வை சீனா முந்திவிடும் என்ற கணிப்புகள் ஏற்கனவே வந்துவிட்டன.

ஆனால், இது இவ்வ ளவு விரைவாக நடந்தேறும் என்பதை ஆய்வா ளர்கள் எதிர்பார்க்கவில்லை. பாதுகாப்பு, விண்வெளி, ரோபோடிக்ஸ், எரிபொருள், சுற்றுச்சூழல், உயிரி தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகிய துறைகளில் சீனா பெருமளவு முன்னேற்றத்தைக் கண்டி ருக்கிறது என்று ஆய்வறிக்கை புள்ளிவிபரங் களுடன் தெரிவிக்கிறது. தங்கள் ஆய்வறிக்கையில், ‘‘எங்கள் ஆய்வின்படி, வலுவான அடித்தளத்தை சீனா  அமைத்திருக்கிறது. அதன் மூலம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வல்லரசாகத் தன்னை  முன்னிறுத்திக் கொண்டுள்ளது. வளர்ந்து வரும் தொழில்நுட்பத் தளங்களில் பெரும்பாலான வற்றில் சீனா பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆய்வுகளை நடத்தியுள்ளது. அத்தகைய ஆய்வு களில் முன்னணியிலும் இருக்கிறது. சீனாவின் சில தொழில்நுட்ப ஆய்வுக்கூடங்கள் பெரும் முன்னேற்றத்தைக் கண்டுள்ளன. உலகின் தரம் வாய்ந்த ஆய்வு மையங்களில் முதல் 10  இடங்களை சீனாவில் உள்ள மையங்கள் பிடித்துள்ளன. 

இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ள அமெரிக் காவை விட, ஒன்பது மடங்கு அதிகமான அள விலான ஆய்வு அறிக்கைகளை சீனா தயாரித்திரு க்கிறது. இந்த ஆய்வறிக்கைகள் பெரிய அள வில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. கடந்த ஆண்டில் நடைபெற்ற ஆய்வுகளைப் பின்பற்றிப் பார்க்கையில் 44 முக்கியமான தொழில்நுட்பங் களில் சீனாவால் உருவாக்கப்பட்டவற்றின் எண்ணிக்கை 37 ஆக இருந்தது. ஆளில்லா விமானம், மேம்பட்ட வெடிமருந்துகள், உயிரி தொழில்நுட்ப உற்பத்தி மற்றும் மின்கலங்கள் உள்ளிட்ட துறைகளில் சீனாவின் முன்னேற்றம் அபாரமானது’’ என்று வல்லுநர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆஸ்திரேலிய கொள்கை மையத்தின் வல்லுநர்கள் பின்தொடர்ந்த 44 முக்கியமான தொழில்நுட்பங்களில் பெரும்பாலானவற்றில் சீனாவின் அறிவியல் மையம் முதலிடம் அல்லது இரண்டாவது இடத்தில் இருந்தது. சீனா வின் ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகளாக அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் நியூசி லாந்து ஆகிய நாடுகள் உள்ளன. இந்த நாடு களில் இருந்து தங்கள் ஆய்வுகள் பற்றிய ஆலோச னைகள் மற்றும் விமர்சனங்களையும் ஆய்வா ளர்கள் பெற்றுக் கொள்கிறார்கள்.

அதிகமான முதலீடு

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையில் பெரிய அளவிலான முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் வலியுறுத்தி வருகிறார். சீனாவின் சாத னைகளில் இருந்து மேற்கத்திய நாடுகள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். சீனாவுக்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான இடைவெளி பெரிய அளவில் உள்ளது. அனைத்து வகை யான உயர்தர தொழில்நுட்பங்களிலும் சீனாவின் ஏகபோகம் உருவாக்கும் நிலை வருகிறது என்று அவர்கள் கருதுகிறார்கள். தங்கள் அறிவைத் திருடி விட்டார்கள் என்ற  அமெரிக்காவின் வாடிக்கையான குற்றச்சாட்டை யும் இந்த ஆய்வு மறுக்கிறது. சீனாவின் அறிவு வளத்தைக் குறைத்து மதிப்பிட வேண்டாம் என்பது இந்த ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.