world

img

மக்களைப் பழி வாங்காதே!

‘‘ஊருக்கு சென்றவுடன் தகவல் அனுப்பு’’

‘‘ஊருக்கு சென்றவுடன் தகவல் அனுப்பு’’ போராட்டக்காரர்களின் பதாகைகளில் ‘‘ஊருக்கு சென்றவுடன் தகவல் அனுப்பு’’ என்ற வரி இடம் பெற்றுள்ளது. தங்கள் குழந்தைகளைத் தொடர் வண்டியிலோ, விமானத்திலோ அல்லது பேருந்திலோ ஏற்றிவிட்டு, செல்ல வேண்டிய இடத்திற்குப் போனதும், சென்றடைந்து விட்டேன் என்ற செய்தியை அனுப்புமாறு அனைவரும் சொல்வது வழக்கமானதாகும். பாதுகாப்பான பயணத்தை வலியுறுத்தும் வகையில் போராடும் தொழிற்சங்கங்கள் இந்த வரியைத் தங்கள் பதாகைகளில் எழுதி மக்கள் கவனத்தை ஈர்த்தன. இளைஞர்களும், மாணவர்களும் இந்த வரியைத் தங்கள் அலைபேசிகள் மூலமாக அனைத்து சமூக வலைத்தளங்களிலும் பதிவு செய்து வருகிறார்கள். புதிய தலைமுறை உங்களை மன்னிக்காது. கண்ணீர் வறண்டு, குமுறலாக மாறியிருக்கிறது என்று இளைஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பல ஆர்ப்பாட்டங்களை கண்ணீர்ப்புகைக் குண்டுகள் மற்றும் லத்திகளைக் கொண்டு அடக்க காவல்துறையினர் முற்பட்டு வருகிறார்கள். தலைநகர் ஏதென்ஸ் நகரின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல்கள் நடந்துள்ளன.

ஏதென்ஸ், மார்ச் 20- காலியாகக் கிடக்கும் ஊழியர்களின் பணி யிடங்களை நிரப்பாமல் மக்களின் வாழ்க்கையை ஆபத்தில் தள்ளும் கிரீஸ் அரசின் போக்கைக் கண்டித்து நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை அந்நாட்டுத் தொழிலாளர்கள் மேற்கொண்டனர். பிப்ரவரி 28 ஆம் தேதியன்று ஒரு பயணிகள் தொடர் வண்டியும், சரக்கு தொடர் வண்டியும் ஒரே பாதையில் வந்ததால் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. டெம்பி என்ற நகரில் நடைபெற்ற இந்தக் கோர விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 57 ஆக உள்ளது. இந்த எண்ணி க்கை மேலும் உயரலாம் என்று எதிர்பார்க்கப்படு கிறது. தொழிலாளர்கள் தொடர்ந்து தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தும், அவற்றை அரசும், நிர்வாகமும் கண்டுகொள்ளாததால்தான் இந்தக் கோர விபத்து நிகழ்ந்தது என்று தொழிற் சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன. இதுபோன்ற துயர சம்பவங்கள் மேலும் நடந்துவிடக்கூடாது என்று வலியுறுத்தி, கிரீசின் இரண்டு பெரிய தொழிற்சங்கங்கள் 24 மணி நேர வேலைநிறுத்தத்திற்கு அழைப்புவிடுத்தன. பல லட்சம் தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதோடு, நாடு முழு வதும் பல்வேறு நகரங்களில் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர். கிரீஸ் கம்யூ னிஸ்ட் கட்சியின் அனைத்துத் தொழிலாளர் போரா ட்ட முன்னணியும் இந்த வேலை நிறுத்தத்திற்கு தனது முழு ஆதரவைத் தெரிவித்திருந்தது.

லாபவெறிதான் காரணம்

முதலாளித்துவ லாபவெறிதான் இதுபோன்ற  துயர சம்பவங்களுக்குக் காரணம் என்று கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. டெம்பியில் நடந்த விபத்துக்கான காரணத்தை மூடி மறைக்க நிர்வாகம் முயற்சிக்கிறது என்றும், அத்தகைய முயற்சிகளை மேற்கொள்வது வருங்காலத்தில் பயணிகளின் பாதுகாப்புக்கு உதவாது என்றும் அக்கட்சி வலியுறுத்தியிருக் கிறது. சிக்கன நடவடிக்கைகள் என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் விரோத முடிவு களுக்கு தற்போதுள்ள வலதுசாரி ஆட்சியாளர் கள், இதற்கு முன்பு இடதுசாரிகள் என்று  சொல்லிக் கொண்டு வலதுசாரிக் கொள்கை களைப் பின்பற்றியவர்கள் ஆகிய அனைவருமே பொறுப்பாவார்கள் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிமிட்ரிஸ் கோட்சோம்பஸ் குற்றம் சாட்டியிருக்கிறார். “தற்காலத்திற்குப் பொருத்தமான அனைத்து சமூகத் தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய நவீனமயமாக்கலை இந்த 21 ஆம் நூற்றாண்டில் கிரேக்க மக்கள், இளைஞர்கள் மற்றும் அவர் களின் அமைப்புகள் எதிர்பார்க்கிறார்கள். தனி யார் நிறுவனங்கள், முதலீடு செய்பவர்கள், பெரும் ஒப்பந்ததாரர்கள், லாபம், எளிதாக ஈட்டப்படும் பணம், மோசடி உள்ளிட்டவற்றைப் பாதுகாக்கும் நவீனமயமாக்கலுக்கு தற்போ தைய மற்றும் முன்னாள் அரசுகள் துணை போயின. இது கிரேக்க மக்களை அழிவுப் பாதை யில் அழைத்துச் சென்றுள்ளன. இதை மக்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கவில்லை” என்ற தனது அறிக்கையில் டிமிட்ரிஸ் கோட் சோம்பஸ் கூறியுள்ளார். கிரேக்க நகரமான கவா லாவில் நடந்த பேரணியில் அவரும்பங்கேற்றார்.

 

 

;