world

img

சீனாவில் பெருவெள்ளம் 44 பேர் பலி

சீனாவில் பெருவெள்ளம் 44 பேர் பலி

பெய்ஜிங், ஜூலை 31- சீனாவில் கனமழையால் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 9 பேர் காணாமல் போயுள்ள னர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன தலைநகர் பெய்ஜிங்கில் கடந்த வாரம் பெய்த கனமழையால் அப்பகுதி முழுவதும் பெரும் வெள்ளம் ஏற்பட்டு அதிக சேதம் உருவாகியுள்ளது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டுள்ளது.  கடுமையான மழையால் சாலைகள் சேதமடைந்துள் ளன. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை மழை யால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற் றப்பட்டுள்ளனர்.  அவர்கள் அனைவரும் பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முழுமையான பேரிடர் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் அங்கு தொடர் கின்றன. பலி எண்ணிக்கையானது பெய்ஜிங்கின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள மலைப்பகுதியான  மியுன் மற்றும் யாங்கிங்கில் தான் அதிகம் பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.