பியாங்யாங், ஜூலை 21- கொரிய தீபகற்பத்திற்குள் அணுஆயுதங்களைக் கொண்டு வருவதன் மூலம் அவற்றை நாங்கள் பயன்படுத்துவதற்கான சூழலை உரு வாக்குகிறீர்கள் என்று வடகொரியா அமெரிக்காவை எச்சரித்திருக்கிறது. ஆசிய-பசிபிக் கடற்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தும் அமெரிக்கா வின் முயற்சி தொடர்கிறது. தென் கொரியாவுடன் இணைந்து ஏராள மான போர்ப் பயிற்சிகளை அமெரிக்க ராணுவம் மேற்கொள்கிறது. கிட்டத்தட்ட மாதம் ஒருமுறை அல்லது சில சமயங்களில் ஒரு மாதத்தில் இரு முறை கூட போர்ப் பயிற்சிகள் நடக்கின்றன.
பெரும் அளவில் அமெரிக்க ராணுவத்தினர் இதில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இதற்கு வடகொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கடந்த வாரத்தில் அணுஆயுதம் தாங்கிய ஏவுகணைகளைக் கொண்ட அமெரிக்காவின் போர்க்கப்பல் தென் கொரியத் துறைமுகத்திற்குள் நுழைந்தது. தற்போது அந்தக் கப்பல் அந்தத் துறைமுகத்தில்தான் மையம் கொண்டுள்ளது. இந்தக் கப்பல் வருகிறது என்ற செய்தி வெளி யானவுடன், வடகொரியாவின் தலை வர் கிம் ஜாங்-உன், “வரலாற்றில் இல்லாத அளவிலான அணுஆயுதப் போரைத் தூண்டும் வகையில் இது இருக்கிறது” என்று எச்சரித்தார். வடகொரியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சரான காம் சுன் நாம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அணு ஆயுதத்தை சோதித்தபோது, எங்கள் மீது அணுஆயுதங்கள் பிரயோகிக்கப்படும் ஆபத்து எழுந்தால் மட்டுமே நாங்கள் அணு ஆயுதங்களைக் கையாளுவோம் என்று உறுதி எடுத்திருந்தோம். தற்போது அமெரிக்காவின் இந்த நடவடிக்கை அத்தகைய நிலையை உருவாக்குகிறது” என்றார். போர் வெறியைத் தூண்டும் வகையில்தான் தென் கொரியா நடந்து கொள்கிறது. புசான் துறை முகத்தில் நிலைகொண்டிருக்கும் அமெரிக்கப் போர்க்கப்பலில் தென் கொரிய ஜனாதிபதி தனது இணைய ரோடு ஏறி நின்று புகைப்படம் எடுத்து கொண்டார். அணுஆயுதத்தை வைத்துக் கொண்டு வடகொரியா வால் ஒன்றும்செய்ய முடியாது என்று கூறி, அமெரிக்கப் போர்க்கப்ப லில் அணுஆயுதங்கள் இருப்பதை உறுதி செய்தார்.
நேரடி ஆபத்து
காங் சுன் நாம் வெளியிட்ட அறிக்கையில், “கடந்த 40 ஆண்டு களில் முதன்முறையாக அணு ஆயுதங்கள் கொரிய தீபகற்பத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறது. மிகவும் ஆபத்தான நீர்ப்பகுதிக்குள் தங்கள் அணுஆயுதங்கள் கொண்ட நீர்மூழ்கிப் போர்க்கப்பல் நுழைந்து ள்ளது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இது எங்கள் நாட்டிற்கு நேரடியாக எழுந்துள்ள ஆபத்து என்றும் கருதுகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார். கொரியப் பகுதியில் பதற்றத்தை அதிகரிப்பதில் அமெரிக்கா மற்றும் தென் கொரியா ஆகிய இரு நாடு களும் முனைப்பாக உள்ளன என்றும் வடகொரியா குற்றம்சாட்டியிருக் கிறது. தனது நாட்டிற்குக் கிழக்கில் உள்ள கடற்பகுதியில் இரண்டு ஏவுகணைகளை வீசி பரிசோதித்தும் இருக்கிறார்கள். இந்நிலையில் ஜப்பானையும் இணைத்துக் கொண்டு மூன்று நாட்கள் பங்கேற்கும் போர்ப்பயிற்சிகள் நடக்கவிருக்கின்றன. அணுஆயுதப் போரை கொரியப் பகுதிக்குள் கொண்டு வரும் வகையில் அமெரிக்காவும், தென் கொரியாவும் அணுஆயுத உடன்பாட்டில் கையெழுத்திட்டி ருக்கின்றன என்று வடகொரியா குற்றம் சாட்டியிருக்கிறது.