world

img

அமெரிக்காவின் விசா கட்டண உயர்வை தங்களுக்குச் சாதகமாக மாற்ற போட்டி போடும் நாடுகள்

அமெரிக்காவின் விசா கட்டண உயர்வை தங்களுக்குச் சாதகமாக மாற்ற போட்டி போடும் நாடுகள்

பெர்லின்,லண்டன்.செப்.25- அமெரிக்கா எச்1பி விசா விண்ணப்பத்திற்கு சுமார் 88 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும் என அறி வித்துள்ளது. இதனால் அறிவியல் தொழில்நுட்பத் துறையை சார்ந்த நிபுணர்கள் அமெ ரிக்காவிற்கு செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது.  இந்த சூழலை ஜெர்மன்,பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப் பிய நாடுகளும் சீனாவும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் வேலை யில் இறங்கியுள்ளன. அமெரிக்கா விசா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் இந்தியர்கள் உள்ளிட்ட திறன் மிகுந்த வெளிநாட்டினரை ஈர்க்கும் வகையில் சீனா கே-விசா கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது.  இந்நிலையில் ஜெர்மனியும் பிரிட்டனும் அமெரிக்காவுக்கு செல்லமுடியாமல் உள்ள அனைத்து துறை நிபுணர்களுக்கும் தங்கள் நாட்டுக்கு பணி புரிய வருமாறு அழைப்பு விடுத்துள்ளன.   இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் பிலிப் அகெர்மான், தகவல் தொழில்நுட்பம், மேலாண்மை, அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் சிறந்த வேலைவாய்ப்புகள் ஜெர்மனியில் உள்ளன. அதனால் இந்தியர்கள் ஜெர்மனிக்கு வரவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.  பிரிட்டன் நிதி அமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ், அமெ ரிக்காவைப் போல முரண்பாடுகள் நிறைந்ததாக இல்லாமல் அதிக திறன் கொண்ட தொழிலாளர்கள் பிரிட்ட னுக்கு வருவதற்கான வழிகளை அரசு எளிதாக்கும் எனக் கூறியுள்ளார்.