பெரு நாட்டில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பெரு நாட்டின் வடக்கே படாஜ் மாகாணத்தில் டயபம்பா பகுதியில் இருந்து லா லிபர்டட்டின் ட்ருஜில்லோ நகரை நோக்கி பயணிகள் பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த பேருந்து திடீரென சாலையில் இருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, நிலைதடுமாறி 100 மீட்டர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 20 பயணிகள் உயிரிழந்தனர். மேலும் 33 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீட்புக் குழுவினர் உயிருக்கு போராடியவர்களை மீட்டு டயபாம்பா பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.