வெனிசுலா தலைநகர் காராகஸ் மீது அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.
வெனிசுலாவிலிருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தப்படுகிறது என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டை வெனிசுலா மீது சுமத்தி வந்த டிரம்ப் அந்நாட்டு இடதுசாரி ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவுக்கு டிரம்ப் மிரட்டல் விடுத்தார்.
மேலும், வெனிசுலாவில் ஆளும் இடதுசாரி அரசை கவிழ்க்க வெனிசுலா கடற்பகுதியில் போர்க்கப்பல்களை நிறுத்தி பதற்றத்தை ஏற்படுத்தி வந்தார்.
மேலும், வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை கைப்பற்றும் நோக்கத்தோடு, ஸ்கிப்பர் என்ற எண்ணெய் கப்பலை அமெரிக்க ராணுவம் சட்ட விரோதமாக கடத்தியது. மேலும் அமெரிக்காவின் தடையை மீறி எண்ணெய் கொண்டு செல்லும் அனைத்துக் கப்பல்களையும் தடுக்க ராணுவத்திற்கு உத்தரவிட்டார்.
வெனிசுலாவில் ஆளும் இடதுசாரி அரசை கவிழ்க்க தொடர் முயற்சியில் ஈடுபட்ட வந்த அமெரிக்கா, தற்போது வெனிசுலா தலைநகர் காராகஸ் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்பு போரைத் தோற்கடிக்க முழு நாடும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும்" என்று வெனிசுலா அரசு அழைப்பு விடுத்துள்ளது.
