world

img

உக்ரைன் ரஷ்ய போரில் இந்திய மாணவன் பலி

புதுதில்லி,மார்ச் 1-  உக்ரைனில் நடந்த குண்டுவீச்சில் இந்திய மாணவர் நவீன் பலியானார் என்று இந்திய வெளியுறவுத் துறை அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நட வடிக்கை மேற்கொண்டுள்ளது. இதனால் அங்கிருந்து வெளியேறும் இந்தியர்கள் மீது உக்ரைன் நாட்டு ராணுவம் மற்றும் போலீஸ் தாக்குவதாக இந்திய மாணவர்கள் தெரி வித்த செய்தி நாளிதழ்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அடுத்த அதிர்ச்சியாக உக்ரைனில் இந்திய மாணவர் ஒருவர் பலியாகியுள்ள செய்தி வெளியாகியுள்ளது. உக்ரைனின் கார்கிவ் நகரில் நிகழ்ந்த குண்டு வீச்சில் இந்திய மாணவர் உயிரிழந்த தாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரி வித்துள்ளது. கர்நாடகவை சேர்ந்த  நவீன்  என்ற இந்திய மாணவர், கார்கிவ் நகரில்  இருந்து வெளியேறுவதற்காக ரயில் நிலை யம் செல்லும் போது குண்டுவெடிப்பில் சிக்கி உயிரிழந்ததாக வெளியுறவுத்துறை அமைச்சகம் டிவிட்டர் பதிவில் தெரிவித்துள் ளது.  இதுகுறித்து அவரது நண்பர் ராபின் கூறு கையில், “நவீன் வெளியே சென்று மற்ற மாண வர்களுக்கு உணவு மற்றும் பிற அத்தியா வசியப் பொருட்களை வாங்கஉதவுவார். நாங்கள் அனைவரும் மனம் உடைந்துள் ளோம்” என்று வேதனையுடன் தெரிவித்தார்.