உகாண்டாவில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த விபத்தில் 7 சிறுவர்கள் உட்பட 20 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டா போர்ட் போர்டல் நகரிலிருந்து அந்நாட்டின் தலைநகர் கம்பாலாவுக்கு 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து ஒன்று புதன்கிழமை காலை புறப்பட்டு சென்றது. அப்போது மலைப்பகுதியில் சென்றுக்கொண்டிருந்த பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த தேயிலை தோட்டத்துக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 7 சிறுவர்கள் உட்பட 20 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 13 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.