ஆப்கானிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்பில் சிக்கி 20 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆப்கானிஸ்தானின் தென்பகுதியில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் 20 பேர் பலியாகினர். 80க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
இதுகுறித்து பஜ்ஹோக் செய்தி நிறுவனம் , ”ஆப்கானிஸ்தானின் தென் பகுதியில் உள்ள கவ்லத் நகரில் காலை குண்டு ஒன்று வெடித்தது. இதில் இரண்டு குழந்தைகள் உட்பட 20 பேர் பலியாகினர். மேலும் 80க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது” என்று தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் செவ்வாய்க்கிழமை அதிபர் அஷ்ரப் கானி பங்கேற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தின் அருகே நடந்த குண்டுவெடிப்பில் 23 பேர் பலியாகினர். மேலும் காபூலில் அமெரிக்கத் தூதரகம் அருகே நடந்த குண்டுவெடிப்பில் 8 பேர் பலியாகினர்.
புதன்கிழமையும் ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது.
ஆப்கானிஸ்தானில் பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் தொடர்ந்து குண்டுவெடிப்பு நடந்து வருவது அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.